ஸ்டைலஸ் ஆதரவுடன் புதிய Realme Pad X அறிமுகம்.. இதன் விலை நீங்கள் நினைப்பதை விட குறைவு..

|

ரியல்மி நிறுவனம் புதிதாக Realme Pad X சாதனத்தை வரும் மே 26 ஆம் தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் முறையான அறிமுகத்திற்கு முன்னதாக, புதிய டேப்லெட்டுக்கான முன்பதிவுகளை Realme தற்போது ஏற்கத் தொடங்கியுள்ளது. டேப்லெட்டின் வடிவமைப்பு மற்றும் பின்புற கேமரா தொகுதியை வெளிப்படுத்தும் ஒரு சுவரொட்டியை சீன மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் Realme பகிர்ந்துள்ளது.

ஸ்டைலஸ் ஆதரவுடன் புதிய Realme Pad X

ஸ்டைலஸ் ஆதரவுடன் புதிய Realme Pad X

இது ஸ்டைலஸ் ஆதரவுடன் ஃப்ளோரசன்ட் க்ரீன் வண்ண விருப்பத்தில் காணப்படுகிறது. வரவிருக்கும் Realme Pad X ஆனது Qualcomm Snapdragon 870 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இந்த புதிய சாதனம் 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி ஆகிய இரண்டு ரேம் மற்றும் சேமிப்பக கட்டமைப்புகளுடன் 5ஜி இணைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தில் இன்னும் என்னென்ன விசேஷமாக விஷயங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளது என்று பார்க்கலாம். புதிய டேப்லெட் சாதனம் வாங்க எண்ணம் இருப்பவர்கள் இந்த தகவலை முழுமையாக படிப்பது சிறந்தது.

Realme அறிமுக நிகழ்வு எப்போது?

Realme அறிமுக நிகழ்வு எப்போது?

Realme நிறுவனம், அதன் சீனா இணையதளத்தில் ஒரு பிரத்தியேக லேண்டிங் பக்கம் வழியாக, Realme Pad X இன் வெளியீட்டை டீஸ் செய்துள்ளது. டீசரின் படி, ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக மே 26 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். வெளியீட்டு நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு சீனாவில் நடைபெறும். உள்ளூர் நேரம் நேரத்தின் படி காலை 11:30 IST அளவில் இது நிகழும். Realme Pad X முன்பதிவுகள் தற்போது அதன் ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் உள்ளது. ஒளிரும் பச்சை வண்ண விருப்பத்தில் முன்பதிவு செய்ய சாதனம் தயாராக உள்ளது.

அரசு எச்சரிக்கை: SBI பயனர்களே உஷார்- உடனே இதை டெலிட் செய்யுங்கள்., தொடவே வேண்டாம்!அரசு எச்சரிக்கை: SBI பயனர்களே உஷார்- உடனே இதை டெலிட் செய்யுங்கள்., தொடவே வேண்டாம்!

Realme Pad X சாதனம் பற்றிய விலை தகவல்கள்

Realme Pad X சாதனம் பற்றிய விலை தகவல்கள்

டேப்லெட்டின் ரெண்டர்கள் பின்புறத்தில் ஒற்றை கேமரா சென்சாரைக் காட்டுகின்றன, மேலும் இது ஸ்டைலஸை ஆதரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் Realme Pad X டேப்லெட்டின் சரியான விலை விவரங்கள் தற்போது தெரியவில்லை. இருப்பினும், Realme Pad X என்ன விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்க்கப்படும் விலை தகவலை டிப்ஸ்டர் பக்கங்கள் யூகித்துள்ளன. இந்த Realme Pad X சாதனம் இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.22,990 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Realme Pad X முன்பதிவு விபரம்

Realme Pad X முன்பதிவு விபரம்

Realme வழங்கும் வரவிருக்கும் டேப்லெட் சலுகையுடன் JD.com இல் பட்டியலிடப்பட்டுள்ளது. பிரைட் செஸ்போர்டு கிரீன், ஸ்டார் கிரே மற்றும் சீ சால்ட் ப்ளூ வண்ண விருப்பங்களில் இது தற்போது ஈ-காமர்ஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மற்றும் 5ஜி இணைப்புடன் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பக உள்ளமைவுகளில் வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது. Realme இன் அடுத்த டேப்லெட்டின் முக்கிய விவரக்குறிப்புகள், முன்பு Realme Pad 5G என குறிப்பிடப்பட்டது, கடந்த காலங்களில் பல முறை கசிந்துள்ளது.

Realme Pad சாதனம் சிறப்பம்சம்

Realme Pad சாதனம் சிறப்பம்சம்

இது Snapdragon 870 SoC மாறுபாடு மற்றும் Snapdragon 8 Gen 1+ சிப்செட் மாறுபாட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் மாறுபாடு 2.5K கொண்ட 2,520 x 1,680 பிக்சல்கள் தீர்மானம் உடைய எல்சிடி டிஸ்ப்ளேவை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இது ஸ்டைலஸ் ஆதரவை வழங்க முடியும் மற்றும் 8,360mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சாதத்தின் சீன அறிமுகத்தை தொடர்ந்து, சாதனம் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யட்டும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Pad X with Qualcomm Snapdragon 870 SoC Launching in India on May 26: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X