பட்ஜெட் விலையில் அசத்தலான ரியல்மி டேப்லெட் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் எக்ஸ் எனும் டேப்லெட் சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 12 -ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய சாதனம். அதேபோல் விரைவில் ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2கே ரெசல்யூஷன் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அசத்தலான சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி பேட் எக்ஸ்சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்தடேப்லெட் வெளிவந்துள்ளது.

இந்த புதிய சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுமற்றும் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே8எம்பி கேமராகொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் 8340 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட்
சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேபோல் ஃப்ளோரசன்ட் கிரீன், சீ ப்ளூ மற்றும் ஸ்டார் கிரே நிறங்களில் இந்த
டேப்லெட் வெளிவந்துள்ளது.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.14,950-ஆக உள்ளது. மேலும் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications