Home
Tablets

செப்டம்பர் 9: தரமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பேட் சாதனத்தை வரும் செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல்தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி பேட் சாதனம் ஆனது 10.4

ரியல்மி பேட் சாதனம் ஆனது 10.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் டேப் மாடல்களை விட அருமையான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிரும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த ரியல்மி பேட் சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.

தனம் ஆனது சாம்பல் மற்றும்

ரியல்மி பேட் சாதனம் ஆனது சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும். அதேபோல் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி பேட் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 8

அதேபோல் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி பேட் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கனவம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட மெல்லிய வடிவமைப்புடன் இந்த ரியல்மி பேட் சாதனம் வெளிவரும்.

 7100 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி பேட் சாதனத்தில் 7100 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி

குறிப்பாக வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி பேட் மாடல். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரியல்மி பேட் சாதனம். மேலும் ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜிசிப்செட் வசதி உள்ளது. பின்பு Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.25,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.27,999 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.29,999-விலையிலும் விற்பனைக்கு வரும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் சாதனத்தில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும்
யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்.

குறிப்பாக ரியல்மி ஸ்மார்ட்போன்களை போன்று தரமான அம்சங்களுடன் ரியல்மி பேட் சாதனமும் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Pad with 7100 mAh Battery Launching in India on September 9: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X