அறக்க பறக்கும் சேல்.. வெறும் ரூ.9,959 பட்ஜெட்ல 1TB மெமரி.. 6400mAh பேட்டரி.. 4G கனெக்டிவிட்டி.. எந்த டேப்லெட்?
ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் (Realme Festive Days Sale) 4ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 6400mAh பேட்டரி, 18W சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட ரியல்மி பேட் மினி (Realme Pad Mini) டேப்லெட் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடைபெறும் ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் ரியல்மி பேட் மினி மற்றும் ரியல்மி பேட் 2 ஆகிய 2 டேப்லெட்களுக்கும் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த 2 டேப்லெட்களின் முழு அம்சங்கள், விலை மற்றும் ஆஃபர் விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரியல்மி பேட் மினி அம்சங்கள் (Realme Pad Mini Specification): இந்த டேப்லெட்டில் 8.7 இன்ச் (1340 × 800 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12என்எம் (Octa-Core UNISOC T616 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் சிங்கிள் மைக் கொண்டிருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்படடுள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட் கிரே மற்றும் ப்ளூ கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வை-பை/4ஜி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை/4ஜி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி கிடைக்கிறது. 4 ஜிபி மாடலுக்கு ரூ.2,040 தள்ளுபடியும் 6 ஜிபி மாடலுக்கு ரூ.2,135 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதன் 4 ஜிபி மாடலை ரூ.9,959க்கும், 6 ஜிபி மாடலை ரூ.10,864க்கும் வாங்கிக் கொள்ள முடியும்.

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த டேப்லெட் 11.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் 13 கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் சிப்செட் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த டேப்லெட்டில் 12 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 33W சூப்பர்வூக் (SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8360mAh பேட்டரி வருகிறது. குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. இதுவொரு 4ஜி மாடலாகும்.

இந்த டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 18,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.15,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications