Home
Tablets

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் மினி சாதனம்.!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி பேட் மினி என்ற டேப்லெட் சாதனத்தை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி பேட் மினி சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் மினி சாதனம்.!

ரியல்மி பேட் மினி

ரியல்மி பேட் மினி ஆனது 8.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,340x800 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய டேப்லெட் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிசைன் மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரியல்மி பேட் மினி மாடலில் Unisoc T616 SoC சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியு ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய டேப்லெட் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்மி பேட் மினி சாதனம் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் உள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் மினி சாதனம்.!

ரியல்மி பேட் மினி சாதனத்தில் 8ஜிபி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளது. பின்பு 6400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி பேட் மினி மாடல். குறிப்பாக புளூடூத் வி5.0, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி பேட் மினி மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,408x1,080 பிக்சல் தீர்மானம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் மினி சாதனம்.!

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக Realme UI R Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் மினி சாதனம்.!

4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.10,600-ஆக உள்ளது. குறிப்பாக ஃப்ளாஷ் பிளாக் மற்றும் ஃப்ளாஷ் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Pad Mini May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X