Home
Tablets

ரூ.10,999-விலையில் அசத்தலான ரியல்மி பேட் மினி அறிமுகம்.! முழு விவரம்.!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி பேட் மின சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வரும் மே 2-ம் தேதி முதல் ரியல்மி, பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சாதனம் நீலம்
  • வைஃபை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பேட் மினி சாதனத்தின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
  • எல்டிஇ 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பேட் மினி சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
  • வைஃபை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பேட் மினி சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
  • எல்டிஇ 4ஜிபி ரேம் மற்றும் 634ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பேட் மினி சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
  • குறிப்பாக இந்த சாதனம் நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1340×800 பிக்சல்

    ரியல்மி பேட் மினி சாதனம் ஆனது 8.7-இன்ச் WUXGA+ எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1340×800 பிக்சல் தீர்மானம் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

    ரியல்மி பேட் மினி சாதனம்

    ரியல்மி பேட் மினி சாதனம் ஆனது ஆக்டோ-கோர் Unisoc T616 சிப்செட் உடன் Mali-G57 MP1 GPU ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    தனத்தின் பின்புறம் 8எம்பி

    ரியல்மி பேட் மினி சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

    ரியல்மி பேட் மினி சாதனத்தில் 6400

    குறிப்பாக ரியல்மி பேட் மினி சாதனத்தில் 6400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு
    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

    4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, புளூடூத்

    4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு டூயல் ஸ்பீக்கர்கள், சிங்கிள் மைக்ரோபோன் ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த
    ரியல்மி பேட் மினி சாதனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad Mini launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X