2026 இல் முதல் 5ஜி டேப்லெட் அறிமுகம் செய்த Realme.. 12200mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பேட் 3 (Realme Pad 3) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது 12200எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பேட் 3 அம்சங்கள் (Realme Pad 3 Specifications): 11.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2800 x 2000 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm processor) உடன் ரியல்மி பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட் செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டேப்லெட் மாடலி உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுல் எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரியல்மி பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் ரியல்மி பேட் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளன.
5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 12200mAh பேட்டரி உடன் ரியல்மி பேட் 3 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ரியல்மி பேட் 3 விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (WIFI) கொண்ட ரியல்மி பேட் 3 மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (5G) கொண்ட ரியல்மி பேட் 3 மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி (5G) கொண்ட ரியல்மி பேட் 3 மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். பிளிப்கார்ட், ரியல்மி.காம் தளங்களில் வரும் ஜனவரி 16-ம் தேதி 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது ரியல்மி பேட் 3 மாடல்.


Click it and Unblock the Notifications








