வீட்டுக்கு 2 ஆர்டர்.. 26 சதவீத ஆஃபரில் 5G டேப்லெட்.. 12200mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், 5ஜி டேப்லெட் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் நல்ல ஆஃபர் வந்துள்ளது. 5ஜி கனெக்டிவிட்டியை கொடுப்பது மட்டுமல்லாமல், இந்த செக்மெண்ட்டில் 12200mAh பேட்டரி கொண்ட மாடலாகவும் இருக்கும் ரியல்மி பேட் 3 (Realme Pad 3) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 26 சதவீத தள்ளுபடி விலைக்கு 5ஜி மற்றும் வை-பை கனெக்டிவிட்டி கொண்ட ரியல்மி பேட் 3 கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி பேட் 3 அம்சங்கள் (Realme Pad 3 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பேட் 3 கொண்டுள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 11.61 இன்ச் (2800 x 2000 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னல் கிடைக்கிறது. மேலும், 296 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.07 பில்லியர் கலர் டெப்த் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12200mAh பேட்டரி கிடைக்கிறது. 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. எப்/2.0 அபெர்சர் கொண்ட 8 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. டைம்-லேப்ஸ், ஹைப்பர்டெக்ஸ்ட் உள்ளிட்ட கேமரா மோட்கள் கிடைக்கின்றன. முன்பக்கத்திலும் எப்/2.0 அபெர்சர் கொண்ட 8 எம்பி கேமரா கிடைக்கிறது. இதில் பிக்சடு போகஸ் (Fixed Focus) கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. சைடுஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (Side Fingerprint Sensor) இந்த ரியல்மி பேட் 3 கிடைக்கிறது. மேலும், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), ஹால் சென்சார் (Hall Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) மற்றும் ஈ-காம்பஸ் (E-compass) கிடைக்கிறது.
யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் குவாட் ஸ்பீக்கர்களை (Quad Speakers) இந்த ரியல்மி பேட் 3 கொடுக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இது, 5ஜி மாடலுக்கு மட்டுமே பொருந்தும். மற்றப்படி வழக்கம்போல வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டிகளை இந்த ரியல்மி பேட் 3 கொடுத்து இருக்கிறது.
வெறும் 6.60 எம்எம் தடிமனில் பட்டையை கிளப்பி இருக்கிறது. 578 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பேட் 3 மாடலை வாங்கி கொள்ளலாம். நெக்ஸ்ட் ஏஐ (Next AI) பீச்சர்களுடன் கிடைப்பதால், பீச்சர்கள் மற்றும் யுஐ பக்காவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications