Home
Tablets

அவசரப்பட்டு எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க..12200mAh பேட்டரி.. வருகிறது புது Realme டேப்லெட்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் போன்களை வரும் 2026 ஜனவரி 26 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன்களுடன் ரியல்மி பேட் 3 5ஜி (Realme Pad 3 5G) மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரியல்மி பேட் 3 5ஜி மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி பேட் 3 5ஜி அம்சங்கள் (Realme Pad 3 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் (Dimensity 7300 Max) உடன் இந்த ரியல்மி டேப்லெட் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் தரமான கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.

அவசரப்பட்டு எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க..

அதேபோல் 11.6-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி பேட் 3 5ஜி மாடல் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2.8கே ரெசல்யூஷன் (2.8K Resolution), டால்பி விஷன், 2,560x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரியல்மி பேட் 3 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதுவும் 8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரியல்மி பேட் 3 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. ஸ்டைலஸ் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி டேப்லெட் வெளிவரும்.

ரியல்மி பேட் 3 5ஜி மாடல் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது . இதுதவிர ஆடியோ பூஸ்ட் ஆதரவும் இதில் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

அதுவும் 12200mAh பேட்டரி உடன் ரியல்மி பேட் 3 5ஜி அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. எனவே இந்த டேப்டெல் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே மற்றும் ஷாம்பெயின் கோல்ட் நிறங்களில் இந்த டேப்டெல் மாடலை வாங்க முடியும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000க்கு கீழ் இந்த டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 3 5G Launch Timeline and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X