இவ்ளோ சீக்கிரமே Realme இன் புதிய டேப்லெட் அறிமுகமாக போகுதா! இப்பவே வரிசையில நின்ற வேண்டியதுதான்! பட்ஜெட் விலை
ரியல்மி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்நிறுவனம் ரியல்மி பேட் 2 (Realme Pad 2) எனும் டேப்லெட் மாடலை வரும் ஜூலை 19-ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் உடன் இந்த ரியல்மி பேட் 2 மாடல் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இணையத்தில் வெளியான ரியல்மி பேட் 2 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக ரியல்மி பேட் 2 ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 2000 x 1200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும்.
குறிப்பாக முன்பு வெளியான ரியல்மி டேப்லெட் ஆனது 10.4-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்தது. ஆனால் விரைவில் அறிமுகமாகும் புதிய ரியல்மி டேப்லெட் ஆனது சற்று பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு இந்த ரியல்மி பேட் 2 மாடல் ஆனது 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்த ரியல்மி பேட் 2 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் போன் பயன்களுக்கு இந்த டேப்லெட் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ரியல்மி பேட் 2சாதனம் அறிமுகமாகும்.
இந்த ரியல்மி பேட் 2 மாடல் ஆனது 20எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுன் இந்த டேப்லெட் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி டேப்லெட் அறிமுகமாகும்.

ரியல்மி பேட் 2 ஆனது 8360 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி டேப்லெட் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பெரிய டிஸ்பிளே, 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ரியல்மி சி53 போன் ஆனது 5ஜி ஆதரவுடன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








