Home
Tablets

தெறிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.19,249 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 8360mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் 16ஜிபி ரேம், 2டிபி மெமரி, 11.5 இன்ச் டிஸ்பிளே, 33W சார்ஜ், 8360mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட ரியல்மி பேட் 2 (Realme Pad 2) டேப்லெட் மிகவும் மிகவும் கம்மியான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த டேப்லெட் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

ரூ.19249 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 8360mAh பேட்டரி.. எந்த டேப்?

அதோடு ஆண்ட்ராய்டு ஓஎஸ் 13 (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) ஓஸ் வருகிறது. இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் இருக்கிறது. இந்த ரியல்மி டேப்லெட் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு 450 பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) ஃபிரிகொன்சி சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி டேப் 2 டேப்லெட்டில் 12 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் எச்டி(HD) வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

ரூ.19249 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 8360mAh பேட்டரி.. எந்த டேப்?

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி டேப்லெட்டில் பிரம்மாண்ட அம்சமாக 8360mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் (SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரியானது, ஒரு ஃபுல் சார்ஜ்க்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது.

இந்த ரியல்மி டேப் 2 டேப்லெட்டில் சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. அதோடு டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல டைப்-சி (Type-C) ஆடியோ கொண்டிருக்கிறது.

இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வைபை 802 (Wifi 802), டைப்-சி சார்ஜிங் ஆகியவை வருகின்றன. இந்த ரியல்மி டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை/4ஜி மாடலின் விலை ரூ.18,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை/4ஜி மாடலின் விலை ரூ.21,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,250 தள்ளுபடியும், 8 ஜிபி மாடலுக்கு ரூ.2,250 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, இந்த டேப்லெட்டின் 6 ஜிபி மாடலை வெறும் ரூ.17,249க்கு வாங்கிக்கொள்ளலாம்.

ரூ.19249 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 8360mAh பேட்டரி.. எந்த டேப்?

அதேபோல 8 ஜிபி மாடலை ரூ.19,249க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த ரியல்மி டேப் 2 டேப்லெட்டில் இமேஜினேஷன் கிரே (Imagination Gray) மற்றும் இன்ஸ்பிரேஷன் கிரீன் (Inspiration Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. மிகவும் கம்மியான விலையில் நல்ல ரேம், பேட்டரி மற்றும் கேமரா கொண்ட டேப்லெட் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த டேப்லெட் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 Sale With 36 Percent Discount in Flipkart Check Specifications, Price, Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X