Home
Tablets

ஆர்டர் பொளக்கும்.. ரூ.14,999 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. QUAD ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.14,999 பட்ஜெட்டில் 10.5 இன்ச் ஐ கம்போர்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 16 ஜிபி ரேம், 15W சூப்பர்வூக் சார்ஜிங், 8300mAh பேட்டரி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் ரியல்மி பேட் 2 லைட் (Realme Pad 2 Lite) ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. ரியல்மி பேட் 2 லைட் மாடலின் பீச்சர்கள் எப்படி? விற்பனை எப்போது உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ரியல்மி பேட் 2 லைட் அம்சங்கள் (Realme Pad 2 Lite Specifications): இந்த ரியல்மி மாடலில் 10.5 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசொலூஷன் வருகிறது. இதுவொரு ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comfort Display) மாடலாகும்.

ஆர்டர் பொளக்கும்.. ரூ.14,999 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) வருகிறது. டார்க் மோட் (Dark Mode), சன்லைட் மோட் (Sunlight Mode) போன்ற டிஸ்பிளே மோட்கள் வருகிறது. ஏஐ பூஸ்ட் என்ஜின் (AI Boost Engine) வருகிறது. ஆகவே, லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ரியல்மி டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதேபோல ஆர்ம் மாலி ஜி 57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. பேட் மாடல்களுக்கான ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் வருகிறது.

மீடியா கன்ட்ரோல், பிளேபேக் சோர்ஸ், சவுண்ட் அட்ஜட்ஸ்மெண்ட் போன்வற்றுக்காக கன்ட்ரோல் சென்டர் (Control Center) வருகிறது. மேலும், கலர் டெம்பரேச்சர் அட்ஜட்ஸ்மெண்ட் (Color Temperature Adjustment) வருகிறது. ஸ்பில்ட் ஸ்கிரீன் (Spilt Scree) வருகிறது. இந்த ரியல்மி பேட் 2 லைட் மாடலில் 2 வேரியண்ட்கள் வருகின்றன.

ஆர்டர் பொளக்கும்.. ரூ.14,999 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. இதுபோக கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட்டுக்காக மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் 15W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 8300mAh பேட்டரி வருகிறது. ஒரு ஃபுல் சார்ஜிக்கு 14.79 மணி நேரங்கள் வீடியோ பிளேபேக் (Video Playback) கொடுக்கும். அதேபோல 184,7 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் (Music Playback) கிடைக்கிறது.

மேலும், 9.69 மணி நேரங்களுக்கு வீடியோ கால் பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டில் ஸ்டீரியோ குவாட் ஸ்பீக்கர்கள் (Stereo Quad Speakers) வருகிறது. ஓரியாலிட்டி ஆடியோ (OReality Audio) டெக்னாலஜி வருகிறது. 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது. ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் நெபுளா பர்பிள் (Nebula Purple) கலர்கள் வருகிறது.

இந்த ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (realme.com) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. விற்பனை தேதி விரைவில் வெளியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 Lite With 8GB RAM 8300mAh Battery Launched Sale From Flipkart Soon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X