ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.18500 போதும்.. 16 ஜிபி ரேம்.. 8360mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. பெஸ்ட் டேப்லெட்!
இந்தியாவில் முதல்முறையாக பட்ஜெட் விலையில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 8360mAh பேட்டரி, 33W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் என்று வியக்கும் அம்சங்களுடன் ரியல்மி பேட் 2 (Realme Pad 2) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த ரியல்மி பேட் 11.5 இன்ச் (2000x1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz, 60Hz மற்றும் 40Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 450 பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) ஓஸ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் வருகிறது. அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படுகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 12 எம்பி மெயின் கேமரா எல்இடி பிளாஷ் லைட்டுடன் வருகிறது.
இந்த கேமரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W சூப்பர்வூக் (SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 8360mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் மேல் பேக்கப் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-Mounted Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ போர்ட், டால்பி அட்மாஸ் (Dolby Atmos), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 4ஜி சப்போர்ட் மற்றும் வைபை 802.11 உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் விலையை பொறுத்தவரையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.22,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி பேட் 2 வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். குறிப்பாக பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும்போது, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதேபோல எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
கம்மியான விலையில் நல்ல பர்பாமென்ஸ் மற்றும் பேட்டரி பேக்கப் வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த டேப்லெட்டை வாங்கிக்கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








