Home
Tablets

Realme Pad X 5G: சொன்னபடி பட்ஜெட் விலையில் அறிமுகம்; ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!

கடந்த பல நாட்களாக "பட்ஜெட் விலையில் 5ஜி டேப்லெட்" என்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிறகு, ரியல்மி நிறுவனத்தின் முதல் 5ஜி டேப்லெட் ஆக ரியல்மி பேட் எக்ஸ் (Realme Pad X) இன்று (அதாவது ஜூலை 26) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? ஏதேனும் அறிமுக சலுகைகள் உண்டா? இந்த டேப்லெட் உடன் ஸ்டைலஸ், கீபோர்ட் இலவசமாக வருமா? அல்லது அதை தனித்தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சும்மா பேச்சுக்கு சொல்லல.. உண்மையாகவே

சும்மா பேச்சுக்கு சொல்லல.. உண்மையாகவே "வேற லெவல்" டேப்லெட்!

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் மூன்றாவது டேப்லெட் ஆன ரியல்மி பேட் எக்ஸ், ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் (முன்னரே குறிப்பிட்டபடி) இது 5G கனெக்ஷனை வழங்கும் Realme நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆகும்.

அறியதோர்களுக்கு இது ரியல்மி பேட், ரியல்மி பேட் மினி மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாவது ரியல்மி டேப்லெட் ஆகும்

மூன்றாவது டேப்லெட்டிலேயே "இப்படிப்பட்ட அம்சங்களா!?" என்று மற்ற நிறுவனங்களே வாய் பிளக்கும் அளவிற்கு பல "வெயிட்டான" அம்சங்களை ரியல்மி பேட் எக்ஸ் பேக் செய்கிறது. வெறுமனே ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை; நிஜமாகவே இது 'ஸ்பெக்ஸ்-பேக்டு' டேப்லெட் ஆக வெளிவந்துள்ளது.

"போதுமான" டிஸ்பிளே முதல் "போதும் போதும்"னு சொல்ல வைக்கும் பேட்டரி வரை!

இது 11-இன்ச் WUXGA+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 105 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பீ கேமரா, 8340mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்து.. ஒட்டுமொத்தமாக "வேற லெவல்" டேப்லெட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

எல்லாவற்றை விடவும் முக்கியமாக, இந்த டேப்லெட் Realme Pencil மற்றும் Realme Smart Keyboard உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களுக்கான சப்போர்ட் உடன் வருகிறது.

Realme Pad X டேப்லெட்டின் விரிவான அம்சங்கள்:

Realme Pad X டேப்லெட்டின் விரிவான அம்சங்கள்:

ரியல்மி பேட் எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 கொண்டு இயங்குகிறது. இது WUXGA+ (1,200x2,000 பிக்சல்கள்) ரெசல்யூஷனை கொண்ட 11 இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, மேம்பட்ட செயல்திறனுக்காக இந்த டேப்லெட்டில் விர்ச்சுவல் ரேம் அம்சமும் அணுக கிடைக்கும். அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 5ஜிபி வரையிலாக RAM-ஐ "கடன்" வாங்கிக்கொள்ள முடியும்.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு வரும்போது, Realme Pad X ஆனது 13 மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வருகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் செல்பீ கேமராவும் உள்ளது, அது 105 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடன் வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் எல்லாம் எப்படி?

ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் எல்லாம் எப்படி?

இந்த டேப்லெட் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகிறது.

டால்பி அட்மாஸ் ஆதரவுடனான குவாட் ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் Realme Pad X ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடனான 8,340mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி பென்சில் மற்றும் கீபோர்ட் பற்றி?

ரியல்மி பென்சில் மற்றும் கீபோர்ட் பற்றி?

இந்த லேட்டஸ்ட் Realme Tablet ஆனது, லோ லேடன்சி ரியல்மி பென்சிலுக்கான ஆதரவுடனும் வருகிறது, இது டேப்லெட்டில் எழுதவும், வரையவும் பயன்படும். மேக்னட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும் இந்த பென்சில் 10.6 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது.

மறுகையில் உள்ள Realme Smart Keyboard-ஐ பொறுத்தவரை, 1.3mm கீ டிராவல் டிஸ்டன்ஸ்-ஐ கொண்டுள்ளது மற்றும் பல்வேறு வகையான மல்டி-டாஸ்க்கிங் மற்றும் ஷார்ட்-கட்களையும் ஆதரிக்கிறது.

இந்த இரண்டுமே டேப்லெட் உடன் இலவசமாக கிடைக்காது; தனித்தனியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Realme Pad X டேப்லெட்டின் இந்திய விலை மற்றும் விற்பனை:

Realme Pad X டேப்லெட்டின் இந்திய விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் Realme Pad X டேப்லெட்டின் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.19,999 க்கு (4ஜிபி + 64ஜிபி) வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள 5ஜி வேரியண்ட்டின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (4ஜிபி + 64ஜிபி)) ஆனது ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும். அதே 5ஜி வேரியண்ட்டின் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.27,999 ஆகும்.

இந்த டேப்லெட் Flipkart, Realme.com மற்றும் ஆஃப்லைன் ரீடெயில் சேனல்கள் வழியாக Glacier Blue மற்றும் Glowing Gray என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

அறிமுக சலுகையை பொறுத்தவரை, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் முதல் விற்பனையின் போது மேற்குறிப்பிட்ட மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் மீதும் ரூ.2,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.

ரியல்மி பென்சில் மற்றும் கீபோர்ட்டின் விலை மற்றும் விற்பனை:

ரியல்மி பென்சில் மற்றும் கீபோர்ட்டின் விலை மற்றும் விற்பனை:

ரியல்மி பென்சிலின் விலை ரூ. 5,499 ஆகும் மற்றும் ரியல்மி ஸ்மார்ட் கீபோர்ட்டின் விலை ரூ.4,999 ஆகும். இந்த இரண்டு ஆக்சஸெரீகளும் எப்போது முதல் விற்பனைக்கு வரும் என்பதை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
Realme First 5G Tablet Realme Pad X Launched in India Check Price First Sale on August 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X