Home
Tablets

Poco அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 8850mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ பேட் எக்ஸ்1 (Poco Pad X1) மாடலை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்டெல் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போக்கோ பேட் எக்ஸ்1 மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ பேட் எக்ஸ்1 அம்சங்கள் (Poco Pad X1 Specifications): 11.2-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ பேட் எக்ஸ்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200×2136 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், அடாப்டிவ் எச்டிஆர் (Adaptive HDR), வெட் ஹேண்ட் டச் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

Poco அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 8850mAh பேட்டரி..  எந்த மாடல்?

குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm's 4nm Snapdragon 7+ Gen 3 chipset)உடன் இந்த புதிய போக்கோ பேட் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பபட்டுளள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் குவால்காம் ஏஐ இஞ்சின் ஆதரவும் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் இந்த போக்கோ பேட் எக்ஸ்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi's HyperOS 2) மூலம் போக்கோ பேட் எக்ஸ்1 மாடல் இயங்குகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ பேட் எக்ஸ்1 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad speakers) இந்த போக்கோ பேட் எக்ஸ்1 மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த சாதனத்தில் 300% வால்யூம் பூஸ்ட் (300% volume boost) ஆதரவும் உள்ளது.

8850எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ பேட் எக்ஸ்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45w ஃபாஸ்ட் ஆதரவும் உள்ளது.

வைஃபை 6இ, புளூடூத் 5.4, எஸ்.பி.சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ பேட் எக்ஸ்1 மாடலில் உள்ளன. மேலும் ஃப்ளிக்கர், ஹால், ஆர்ஜிபி எல்இடி, ஐஆர் ரிமோட் மேக்னெட்டிக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் போக்கோ பேட் எக்ஸ்1 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் எடை 500 கிராம் ஆகும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ பேட் எக்ஸ்1 மாடலின் விலை USD 349 (இந்திய மதிப்பில் ரூ.31.130)-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை USD 399 (இந்திய மதிப்பில் ரூ.35,590)-ஆக உள்ளது. இன்று முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் இந்த புதிய போக்கோ டேப்லெட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco Pad X1 launched in the global market: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X