Home
Tablets

வாங்குனா இந்த டேப்லெட் வாங்கணும்.. 10000mAh பேட்டரி.. டால்பி விஷன்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

போக்கோ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது போக்கோ பேட் (POCO Pad) எனும் புதிய டேப்லெட் மாடலை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது போக்கோ நிறுவனம். இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

போக்கோ பேட் அம்சங்கள் (Poco Pad specifications): 12.1-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய போக்கோ பேட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2.4கே ரெசல்யூஷன், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate),16:9 அஸ்பெக்ட் ரேசியோ(Aspect Ratio), டால்பி விஷன் (Dolby Vision), 68.7 பில்லியன் கலர்ஸ் (68.7 billion colors) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

வாங்குனா இந்த டேப்லெட் வாங்கணும்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ் (TUV Rheinland Blue light certification) கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான போக்கோ பேட் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் போக்கோ பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த இந்த டேப்லெட் மாடலில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

வாங்குனா இந்த டேப்லெட் வாங்கணும்.. எந்த மாடல்? என்ன விலை?

8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய போக்கோ டேப்லெட். பின்பு குவாட் ஸ்பீக்கர்கள் (Quad speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

இந்த போக்கோ பேட் மாடல் உடன் ஸ்மார்ட் பென் (Smart Pen), கீபோர்டு (Keyboard) மற்றும் கவர் (Cover) போன்றவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை தனித்தனியாக வாங்க முடியும். மேலும இந்த போக்கோ பேட் மாடலில் பல்வேறு சென்சார் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்குனா இந்த டேப்லெட் வாங்கணும்.. எந்த மாடல்? என்ன விலை?

10000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கிரே (Grey) மற்றும் ப்ளூ (Blue) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். குறிப்பாக 571 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். வைஃபை 6 (Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன.

போக்கோ பேட் ஆனது தற்போது சர்வதே சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போக்கோ பேட் மாடலின் விலை USD 299 (இந்திய மதிப்பில் ரூ. 24,899)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco Pad with Snapdragon 7s Gen 2 launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X