அடுத்த Poco டேப்லெட் ரெடி.. 12000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
போக்கோ நிறுவனம் தனது போக்கோ பேட் எம்1 (Poco Pad M1) மாடலை வரும் நவம்பர் 26-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த புதிய டேப்லெட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போக்போ பேட் எம்1 மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
போக்கோ பேட் எம்1 அம்சங்கள் (Poco Pad M1 Specifications): 12.1-இன்ச் 2.கே டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 2560 பிக்சல்ஸ், 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Qualcomm's Snapdragon 7s Gen 4) சிப்செட் உடன் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போக்கோ பேட் எம்1 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போக்கோ டேப்லெட் மாடலில் உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad speakers) உடன் போக்கோ பேட் எம்1 மாடல் வெளிவரும். எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த போக்கோ டேப்லெட் மாடலில் உள்ளது.
IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது போக்கோ பேட் எம்1 மாடல். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ டேப்லெட் மாடலில் உள்ளன.

12000mAh பேட்டரி உடன் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
கிராஃபைட் கிரே மற்றும் ப்ளூ நிறங்களில் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் போக்கோ பேட் எம்1 மாடல் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய டேப்லெட்.


Click it and Unblock the Notifications








