Home
Tablets

அவசரப்பட்டு புது டேப்லெட் வாங்காதீங்க.. 10000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. வருகிறது Poco பேட்.. என்ன விலை?

போக்கோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் போக்போ எம்6 பிளஸ் 5ஜி போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதாவது போக்கோ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது போக்கோ பேட் (poco pad) எனும் டேப்லெட் மாடலின் டீசர் பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி உள்ளது.

எனவே வரும் வாரங்களில் இந்த போக்கோ பேட் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்பிளேவுடன் போக்கோ டேப்லெட் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போக்கோ பேட் மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அவசரப்பட்டு டேப்லெட் வாங்காதீங்க.. வருகிறது Poco பேட்.. என்ன விலை?

போக்கோ பேட் அம்சங்கள் (poco pad Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ பேட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (600 nits peak brightness), டால்பி விஷன், 2.5கே ரெசல்யூஷன் ( 2.5K resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் இந்த போக்கோ பேட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மெட்டல் பாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ பேட் சாதனம்.

ஹைபர் ஓஎஸ் (Xiaomi HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போக்கோ பேட் சாதனம். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் போக்கோ பேட் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டு டேப்லெட் வாங்காதீங்க.. வருகிறது Poco பேட்.. என்ன விலை?

10000mAh பேட்டரி வசதியுடன் போக்கோ பேட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.

சிங்கிள் 8எம்பி ரியர் கேமரா உடன் இந்த டேப்லெட் வெளிவரும். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். இதுதவிர வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo courtesy: poco

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco Pad is confirmed to launch in India soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X