Home
Tablets

POCO அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 7600mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ பேட் சி1 (POCO Pad C1) எனும் டேப்லெட் மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ பேட் சி1 அம்சங்கள் (POCO Pad C1 specifications): 9.7-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ பேட் சி1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2048 × 1280 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (180Hz touch sampling rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

POCO அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி (Qualcomm Snapdragon 6s 4G) சிப்செட் உடன் இந்த புதிய போக்கோ டேப்டெல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போக்கோ பேட் சி1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

8எம்பி ரியர் கேமரா உடன் போக்கோ பேட் சி1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கேமரா உதவியுடன் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos)மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போக்கோ பேட் சி1 மாடலில் உள்ளன. அதுவும் HyperOS 3 மூலம் இந்த புதிய டேப்லெட் மாடல் இயங்குகிறது.

7600எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ பேட் சி1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

POCO அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. எந்த மாடல்? என்ன விலை?

4ஜி, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போக்கோ பேட் சி1 மாடலில் உள்ளன. கிரே (Grey) மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த போக்கோ பேட் சி1 மாடல் வெளியாகி உள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ பேட் சி1 மாடலின் விலை USD 1399 (இந்திய மதிப்பில் ரூ.13,355) ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை USD 179 (இந்திய மதிப்பில் ரூ.17,200) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
POCO Pad C1 With 7600mAh battery launched global: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X