Home
Tablets

ஆகஸ்ட் 23 வரை பொறுங்க.. 10000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. வருகிறது Poco 5G டேப்லெட்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது போக்கோ பேட் 5ஜி (poco pad 5G) எனப்படும் டேப்லெட் மாடல் ஆனது வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான போக்கோ பேட் 5ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

போக்கோ பேட் 5ஜி அம்சங்கள் (poco pad 5G Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ பேட் 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (600 nits peak brightness), டால்பி விஷன், 2.5கே ரெசல்யூஷன் ( 2.5K resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஆகஸ்ட் 23 வரை பொறுங்க.. வருகிறது போக்கோ 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் இந்த போக்கோ பேட் 5ஜிமாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மெட்டல் பாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ பேட் சாதனம்.

தனித்துவமான ஹைபர் ஓஎஸ் (Xiaomi HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போக்கோ பேட் 5ஜி சாதனம். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

போக்கோ பேட் 5ஜி ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 10000mAh பேட்டரி வசதியுடன் போக்கோ பேட் 5ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23 வரை பொறுங்க.. வருகிறது போக்கோ 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். இதுதவிர 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த போக்கோ பேட் 5ஜி ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் போக்கோ பேட் 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் போக்கோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO Pad 5G India Launch Date Announced: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X