பாவம் Samsung, OnePlus! போட்டுத்தள்ளும் விலையில் Pixel Tablet.. Google ஆண்டவர் ஒரு முடிவுல தான் இருக்கார் போல!
இந்தியா மட்டுமின்றி உலகளாவிய டேப்லெட் மார்க்கெட்டில் சிம்ம சொப்பனமாக திகழும் சாம்சங் (Samsung) நிறுவனத்திற்கும், மிகவும் சமீபத்தில் தான் தனது முதல் டேப்லெட்டை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கும் சேர்ந்தாற்போல வேட்டு வைக்கும்படி கூகுள் (Google) ஒரு வேலையை பார்த்துள்ளது!
நாம் இங்கே பேசுவது பிக்சல் டேப்லெட்டை (Pixel Tablet) பற்றித்தான். வருகிற மே 10 ஆம் தேதியன்று நடக்கவுள்ள கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) நிகழ்வின் போது, அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் 3 முக்கியமான தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு நடந்த கூகுள் ஐ/ஓ நிகழ்வின் போது முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்ட பிக்சல் டேப்லெட் ஆனது பிக்சல் 7ஏ (Pixel 7a) மற்றும் கூகுளின் முதல் ஃபோல்டபிள் போனான (Google's First Foldable Phone) பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) உடன் சேர்த்து இந்தாண்டு நடக்கும் ஐ/ஓ-வின் போது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் பிக்சல் டேப்லெட்டின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், கலர் வேரியண்ட்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதன்படி பிக்சல் டேப்லெட் ஆனது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்.
மேலும் இது போர்சேலைன் (Porcelain) மற்றும் ஹேஸ் (Haze) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை (டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட் வழியாக கிடைத்த தகவலின்படி) இது தோராயமாக ரூ.54,000 - ரூ.58,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த அளவிலான விலை நிர்ணயம் சாம்சங்கின் ப்ரீமியம் டேப்லெட்களுக்கும் (Samsung Premium Tablets), ஒன்பிளஸின் முதல் டேப்லெட் (OnePlus First Tablet) ஆன ஒன்பிளஸ் பேடுக்கும் (OnePlus Pad) கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் பிக்சல் டேப்லெட் ஆனது ஆப்பிள் ஐபேட்களின் (Apple iPad) வியாபாரத்தை கூட சரித்து பார்க்கலாம்.
அம்சங்களை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் டேப்லெட் ஆனது டென்சர் ஜி2 சிப்செட் (Tensor G2 SoC) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கூகிளின் யுஎஸ்ஐ 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட் (USI 2.0 Stylus Support) உடனான 10.95 இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம்.
இது 8 ஜிபி வரையிலான ரேம் உடன் அனுப்பப்படும் என்றும், வைஃபை 6 கனெக்டிவிட்டியை வழங்குமென்றும் கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, முன் மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் பேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. கடைசியாக இது 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிக்சல் டேப்லெட் உடன் அறிமுகமாகும் மற்ற 2 தயாரிப்புகளை பொறுத்தவரை, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது ரூ.45,000 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். மறுகையில் உள்ள பிக்சல் ஃபோல்ட் ஆனது ரூ.1,48,000 க்கு வெளியாகலாம். அதாவது கூகுளின் முதல் ஃபோல்டபிள் போன் ஆனது சாம்சங்கின் லேட்டஸ்ட் ஃபோல்ட் மாடலை விட மலிவானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications