வீட்டுக்கு 1 ஆர்டர் போடும் விலை.. Google-ன் முதல் டேப்லெட் ஆக Pixel Tablet அறிமுகம்.. இனி Apple iPad எதுக்கு!
ஆப்பிள் ஐபேட்களை (Apple iPad) அப்படியே ஓரங்கட்டும் விலையில் கூகுளின் (Google) முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் (First Android Tablet) ஆக பிக்சல் டேப்லெட் (Pixel Tablet) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக இதுவொரு மல்டி-பர்போஸ் மேக்னடிக் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் (Multi-purpose Magnetic Charging Speaker Dock) உடன் வருகிறது.
பிக்சல் டேப்லெட் உடன் வரும் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் ஆனது டேப்லெட்டிற்கான சார்ஜிங் பிளாட்ஃபார்மாக (Charging Platform) செயல்படும் அதே நேரத்தில் அடிஷனல் ஸ்பீக்கராகவும் (Additional Speaker) செயல்படும். இது டேப்லெட்டை விட நான்கு மடங்கு அதிக பாஸை (Bass) வழங்குமென்றும் கூறப்படுகிறது.

பிக்சல் டேப்லெட் அம்சங்கள்: இது 2560 x 1600 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio), 500நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 276பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 10.95-இன்ச் WQXGA டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் யூஎஸ்ஐ 2.0 டச்பென்னிற்கு (USI 2.0 Touch Pen) இணக்கமானதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கூகுளின் சொந்த சிப்செட்டான கூகுள் டென்சர் ஜி2 (Google Tensor G2) மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, பின்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 8எம்பி கேமரா உள்ளது; முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இந்த டேப்லெட் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) ஆதரவுடனும் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த டேப்லெட்டுடன் வரும் அடிஷனல் மேக்னடிக் டாக்கில் 43.5 மிமீ ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 27Wh பேட்டரியை பேக் செய்கிறது. கூகுளின் கூற்றுப்படி, இது 12 மணிநேர வீடியோ பிளேபேக்கை (Video Playback) வழங்கும்.
493 கிராம் எடையுள்ள இந்த டேப்லெட், மேக்னடிக் டாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கார்டு (இது தனியாக விற்கப்படுகிறது) ஆகியவற்றின் கீழ் 15W சார்ஜிங்கை வழங்கும். ஃபிங்கர் பிரிண்ட் (Finger Print) சென்சாருடன் வரும் பிக்சல் டேப்லெட்டில் வைஃபை 6, ப்ளூடூத் 5.2, 4-பின் ஆக்சஸெரி கனெக்டர், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்றவைகளுக்கான ஆதரவும் உள்ளது.
பிக்சல் டேப்லெட் விலை விவரங்கள்: (ரீடெயில் பாக்ஸில்) மேக்னடிக் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் உடனாக வரும் கூகுள் பிக்சல் டேப்லெட் ஆனது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.40,900 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.49,100 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் டேப்லெட் விற்பனை விவரங்கள்: இது வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, யுகே, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே விற்பனையாகும். இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவல் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications








