Home
Tablets

பஞ்சு பஞ்சா பறக்கும் பவர் பேங்க்.. 32,000mAh பேட்டரி.. 113 நாட்கள் சார்ஜ் தாங்கும் 5G டேப்லெட்.. என்ன விலை?

ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி (Oukitel RT7 Titan)எனும் அசத்தலான ரக்கட் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 5ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த பிராசஸர், பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் ஆனது 32000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் 2 ஆயிரத்து 720 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்-பை ( கிட்டத்தட்ட 113.3 நாட்கள்) வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்கவே இருக்காது.

32,000mAh பேட்டரி.. 113 நாட்கள் சார்ஜ் தாங்கும் 5G டேப்லெட்!

குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடலில் 10.1-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். குறிப்பாக தரமான மென்பொருள் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (இயங்குதளம்) உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIL-STD-810H சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69K சான்று பெற்றுள்ளது இந்த டேப்லெட். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது.

இந்த ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 20எம்பி நைட் விஷன் சென்சார் + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட்.

32,000mAh பேட்டரி.. 113 நாட்கள் சார்ஜ் தாங்கும் 5G டேப்லெட்!

24 ஜிபி வரையிலான ரேம் (12 ஜிபி ரேம்,12ஜிபி வரை நீட்டிக்கும் வசதி) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த டேப்லெட் மாடலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் மாடல் 32000 எம்ஏஎச் பேட்டரியுடன் 33 வாட்ஸ் பாஸ் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த டேப்லெட் மாடல் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேபோல் பவர்பேங்க் வாங்க வேண்டிய தேவையும் இருக்காது.

மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் ஔகிடெல் ஆர்டி7 டைட்டன் 5ஜி டேப்லெட் மாடலின் விலை 999.97 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.82,661) ஆகும். பின்பு இந்த டேப்லெட் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் சில சர்வதேசச் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இருந்தபோதிலும் விரைவில் இந்த அசத்தலான டேப்லெட் இந்தியாவுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel RT7 Titan 5G tablet with 32,000mAh battery launched : Check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X