ஓங்கி அடிச்ச Oukitel.. தரமான அம்சத்துடன் Oukitel OT11 Tablet.. மார்கெட்லயே கம்மி விலை.. எப்போ வாங்கலாம்?
ஓகிடெல் (Oukitel) நிறுவனம் புதிதாக ஒரு அட்டகாசமான டேப்லெட் (Tablet) சாதனத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஓகிடெல் நிறுவன டேப்லெட் சாதனம் ஓகிடெல் OT11 (Oukitel OT11 Tablet) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தரணமா பெரிய டிஸ்ப்ளே, தாராளமான பேட்டரி ஆயுள் மற்றும் இன்னும் பல அற்புதமான அம்சங்கள் உடன் இப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11 Tablet) சாதனம் பற்றிய விலை விபரம் மற்றும் முழு சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனம் ஒரு என்ட்ரி லெவல் டேப்லெட் சாதனமாக வெளிவந்துள்ளது. இதுவொரு ஆரம்ப நிலை டேப்லெட் சாதனமாக இருப்பதினால், இதில் அதிக அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியாது என்று தான் உங்களை போல நாங்களும் கருதினோம். ஆனால், ஓகிடெல் நிறுவனம் இந்த ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனத்தை பல அற்புதமான அம்சங்கள் உடன் உருவாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனம் யூனிசாக் டைகர் T606 சிப்செட் உடன் வெளிவருகிறது. இந்த சிப்செட் வழக்கமாக மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ஒரு பொதுவான சிப்செட்டாகும். இந்த சிப்செட் 4GB ரேம் உடன் இணையகூடிய சிப்செட் மாடலாகும். இருப்பினும் ஓகிடெல் நிறுவனம் இந்த புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனத்தில் 16GB ரேம் அம்சத்தை வழங்கியுள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் மூலம் இது சாத்தியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்த புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனம் 128GB வரையிலான ஸ்டோரேஜ்ஜை பெரும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவுபடுத்த கூடிய எக்ஸ்ட்ரா மெமரி அம்சத்தையும் வழங்குகிறது.
புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் 11" இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிஸ்ப்ளே வைடுவைன் L1 (Widewine L1) சான்றுடன் வருகிறது. இதற்கான பொருள் அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos), நெட்பிலிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற உள்ளடக்கங்களை நீங்கள் முழு ரேசொழுஷன் உடன் வருகிறது. இந்த ஓகிடெல் டேப்லெட் சாதனம் அண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் வருகிறது.

இது 13 மெகா பிக்சல் ரியர் கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில் இந்த டேப்லெட் சாதனம் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இந்த புதிய ஓகிடெல் OT11 டேப்லெட் சாதனம் 8000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த பேட்டரி 10 மணி நேர வெப் பிரவுசிங் ஆயுளை சிங்கிள் சார்ஜில் வழங்குகிறது. இது டூயல் சிம் சப்போர்ட், ஸ்டைலஸ் ஆதரவு, மற்றும் பேஸ் அன்லாக் அம்சம் போன்றவற்றை வழங்குகிறது.
இந்த புதிய ஓகிடெல் OT11 (Oukitel OT11) டேப்லெட் சாதனம் விலை பற்றி பேசுகையில், நிறுவனம் இதை $200 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த Oukitel OT11 Tablet வெறும் ரூ. 16,000 விலை புள்ளியில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








