Home
Tablets

ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் அறிமுகம்.! அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!

ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒப்போ பேட் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. தற்போது இந்த சாதனம் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ பேட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11-இன்ச் WQXGA டிஸ்பிளே

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் WQXGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,560×1,600 பிக்சல் தீர்மானம், 16:10
என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், TÜV Rheinland குறைந்த நீல ஒளி சான்றிதழ்உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல்.

ஒப்போ பேட் மாடலில் மிகவும் எ

ஒப்போ பேட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.

ஒப்போ பேட் மாடலின் பின்புறம் 13

புதிய ஒப்போ பேட் மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதுவிர பல கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.

னது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும்

ஒப்போ பேட் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஒப்போ டேப்டெல் மாடலில் 8

இந்த ஒப்போ டேப்டெல் மாடலில் 8360 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்கது. பின்பு 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட்

வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பேட் மாடலின் விலை CNY 2,299 (இந்திய மதிப்பில் ரூ.27,400) ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,800) ஆக உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை CNY 3,499(இந்திய மதிப்பில் ரூ.41,800) ஆக உள்ளது ஒப்போ நிறுவனம் இந்த டேப்லெட் உடன் OPPOபென்சில் எனப்படும் ஸ்டைலஸை அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Pad with Snapdragon 870 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X