ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ பேட்.! முழு விவரம்!

|

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ பேட் எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தரமான சிப்செட், அசத்தலான கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ பேட் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேட்

ஒப்போ பேட்

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொணடு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதியடேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

ஒப்போ நிறுவனத்தின்

ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.

வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த அந்த அம்சம் வெளிவருவதாக தகவல்.! புது அப்டேட்: ரெடியா இருங்க.!வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த அந்த அம்சம் வெளிவருவதாக தகவல்.! புது அப்டேட்: ரெடியா இருங்க.!

ஒப்போ பேட்

ஒப்போ பேட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் கலர்ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ பேட் சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்-திருநெல்வேலியில் நடந்த என்ஜின் சோதனை வெற்றி:இஸ்ரோ பெருமிதம்-அடுத்து என்ன?ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்-திருநெல்வேலியில் நடந்த என்ஜின் சோதனை வெற்றி:இஸ்ரோ பெருமிதம்-அடுத்து என்ன?

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு ஒப்போ பேட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தசாதனத்தில் 8080 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டு இந்த புதிய ஒப்போ சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனம்

குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒப்போ பேட் . அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த விவோ வி23 ப்ரோ 5ஜி- 50 எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வசதி!இந்தியாவில் விற்பனைக்கு வந்த விவோ வி23 ப்ரோ 5ஜி- 50 எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வசதி!

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் மற்றும் ஒப்போவில் கிடைக்க கூடிய குறைந்த விலை போன்கள் இது தான்.. பெஸ்ட் டீஸ் இன்று மட்டுமே..சாம்சங் மற்றும் ஒப்போவில் கிடைக்க கூடிய குறைந்த விலை போன்கள் இது தான்.. பெஸ்ட் டீஸ் இன்று மட்டுமே..

ப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-

இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680சிப்செட் வசதி உள்ளது. மேலும் அட்ரினோ610ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 குறிப்பிடத்தக்கது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்

புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்10 வாட் பாஸ்ட் சார்ஜிங்வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதியஸ்மார்ட்போன். ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் இரட்டை சிம்,4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த சாதனத்தின் எடை 185 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலின்விலை 1,599 Yuan (இந்திய மதிப்பில் ரூ.23,500) ஆக உள்ளது. அதேபோல் Cloudy Black மற்றும் Qingchuan Blueநிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Pad With Snapdragon 870 Chip Launching Soon: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X