பிப்ரவரி 24: ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் அறிமுகமாகும் ஒப்போ டேப்லெட்.!
ஒப்போ நிறுவனம் முதல் டேப்லெட் சாதனத்தை வரும் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்திற்கு ஒப்போ பேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ டேப்லெட்
குறிப்பாக இந்த ஒப்போ டேப்லெட் சாதனம் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புஇப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ டேப்லெட் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொணடு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதியடேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.

ஒப்போ பேட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் கலர்ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ பேட் சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ பேட் ஆனது 8080 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். மேலும் சமீபத்தில் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்தஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ36
ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680சிப்செட் வசதி உள்ளது. மேலும் அட்ரினோ610ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதியஸ்மார்ட்போன்ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த சாதனத்தின் எடை 185 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications