புது Oppo டேப்லெட் அறிமுகம்.. 9340mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஒப்போ டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ பேட் எஸ்இ அம்சங்கள் (OPPO Pad SE specifications): 11-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி ஜி100 சிப்செட் (MediaTek Dimensity G100 chipset) உடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கலர்ஒஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) சார்ந்த ஆண்ட்ராய்டுட 15 (Android 15) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் ஆதரவும் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகளுடன் இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது.
5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.
9340mAh பேட்டரி உடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 509 கிராம் ஆகும். அதேபோல் புளூடூத் 5.4, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் கூகுள் ஜெமினி (Google Gemini) ஆதரவும் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஆனால் ஒப்போ பேட் எஸ்இ ஆனது தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை MYR 699 (இந்திய மதிப்பில் ரூ.14,000) ஆக உள்ளது. நைட் ப்ளூ, ஸ்டார்லைட் சில்வர் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








