Home
Tablets

கொஞ்சம் பொறுங்க.. 9340mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. வருகிறது ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் ஒப்போ பேட் எஸ்இ (Oppo Pad SE) மாடலை இந்தியாவில் வரும் ஜூலை மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் இந்த ஒப்போ பேட் எஸ்இ மாடலின் அறிமுகம் குறித்த தகவலை வெளியிட்டார். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ பேட் எஸ்இ அம்சங்கள் (Oppo Pad SE specifications): 11-இன்ச் எச்டி பிளஸ் 2கே ரெசல்யூஷன்( 2K resolution) எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,200x1,920 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?

கலர்ஒஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1) சார்ந்த அண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ டேப்லெட் வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்டெல் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி ஜி100 (MediaTek Dimensity G100) சிப்செட் வசதியுடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 5எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. பின்பு ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஒப்போ பேட் எஸ்இ வெளிவரும். ஆனால் இதில் கைரேகை சென்சார் வசதி இல்லை.

9,340mAh பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் சில்வர் நிறங்களில் இந்த ஒப்போ பேட் எஸ்இ மாடல் அறிமுகமாகும். அதேபோல் ஒப்போ பேட் எஸ்இ மாடல் ஆனது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Pad SE India launch timeline, specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X