Home
Tablets

அதிருது பட்ஜெட்.. ரூ.21,420 போதும்.. QUAD ஸ்பீக்கர்.. 8000mAh பேட்டரி.. 2.4K ரெசொலூஷன்.. எந்த டேப்லெட்?

பட்ஜெட்டில் 2.4K ரெசொலூஷன் டிஸ்பிளே, 33W சூப்பர்வூக் சார்ஜிங், 8,000mAh பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள், ஈஐஎஸ் கேமரா, டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற அம்சங்களை கொண்ட ஓப்போ பேட் நியோ (Oppo Pad Neo) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓப்போ பேட் நியோ அம்சங்கள் (Oppo Pad Neo Specifications): இந்த டேப்லெட்டில் 11.35 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2.4K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஎஸ் (LTPS) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.21,420 போதும்.. QUAD ஸ்பீக்கர்.. 8000mAh பேட்டரி.. 2.4K ரெசொலூஷன்!

அதோடு 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 260 பிபிஐ மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ பேட் நியோ டேப்லெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியர் கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் வருகிறது. அதேபோல பனோரமா (Panorama), டைம்-லேப்ஸ் (Time Lapse) மற்றும் போர்ட்ராய்டு (Portrait) போன்ற சூட்டிங் மோட்கள் வருகின்றன.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் வருகிறது. அதோடு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 (Arm Mali G57 MC2) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் வருகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.2 (ColorOS 13.2) வருகிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொண்டுள்ளது.

ரூ.21,420 போதும்.. QUAD ஸ்பீக்கர்.. 8000mAh பேட்டரி.. 2.4K ரெசொலூஷன்!

இந்த ஓப்போ பேட் நியோ டேப்லெட்டில் 33W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. ஆகவே, ஆடியோ குவாலிட்டி பக்காவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாடலில் ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), லைட் சென்சார் (Light Sensor) மற்றும் அக்சிலெரேசன் சென்சார் (Acceleration Sensor) போன்றவை வருகின்றன. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் டைப்-சி இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது.

அதேபோல ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை (Wi-Fi) வேரியண்ட்டின் விலை ரூ.21,420ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட எல்டிஇ (LTE) வேரியண்ட்டின் விலை ரூ.24,990ஆக இருக்கிறது.

இந்த ஓப்போ பேட் நியோ டேப்லெட்டில் ஸ்பேஸ் கிரே (Space Grey) கலர் விற்பனைக்கு வர இருக்கிறது. இப்போது, மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்த நாடுகளில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதே அம்சங்களுடன் இந்தியாவில் டேப்லெட் வேண்டும் என்றால், ஒன்பிளஸ் பேட் கோ மாடலை தேர்ந்தெடுங்கள். இதன் விலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad Neo With Helio G99, 8000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X