Home
Tablets

OPPO மினி டேப்லெட்.. 5.39மிமீ ஸ்லிம் பாடி.. 8000mAh பேட்டரி.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனை போலவே லுக் கொடுத்து, அதில் 8000mAh பேட்டரி மற்றும் 8.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்து ஒட்டுமொத்த மார்கெட்டையும் மிரளவிட்ட ஓப்போ பேட் மினி (OPPO Pad Mini) ஏப்ரல் 30ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 5.39மிமீ பாடியில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுத்து உள்ளது.

சீன மார்கெட்டில் ஓப்போ பேட் மினி (OPPO Pad Mini) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது. பெரிதாக இல்லாமல், லைட் வெயிட்டில் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் பீல் கொடுக்கும்படி டேப்லெட்டை தேடிக்கொண்டிருப்போருக்கு ஏற்ற மாடலாக 279 கிராம் எடையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OPPO மினி டேப்லெட்.. 5.39மிமீ ஸ்லிம் பாடி.. 8000mAh பேட்டரி.. மாடல்?

ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அட்ரினோ 829 ஜிபியு கொடுத்துள்ளது. 12 ஜிபி ரேம் கிடைப்பதால், லேக் ப்ரீ அவுட்புட் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளே, சிப்செட், கேமரா பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்லலாம்.

ஓப்போ பேட் மினி அம்சங்கள் (OPPO Pad Mini Specifications): அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ பேட் மினி கொண்டுள்ளது. லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 2.5K ரெசொலூஷன் கொண்ட 8.8 இன்ச் (2520 x 1680 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த ஓப்போ பேட் மினி கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ஃப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. மினி மாடலாக இருப்பதால், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மட்டுமே கிடைக்கிறது. மேலும், 2 மைக்ரோபோன்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.39 எம்எம் தடிமன் மற்றும் 279 கிராம் எடை கொடுத்துள்ளது. மேட் ஸ்கிரீன் மாடலானது, 5.46 எம்எம் தடிமன் மற்றும் 282 கிராம் எடை கொடுத்துள்ளது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) மற்றும் டைப்-சி போர்ட் கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.

ஓப்போ பேட் மினி விலை (OPPO Pad Mini Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.50,832ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,955ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மேட் ஸ்கிரீன் வேரியண்ட்டின் விலை ரூ.61,826ஆக இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,826ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மேட் ஸ்கிரீன் வேரியண்ட்டின் விலை ரூ.68,697ஆகவும் இருக்கிறது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Pad Mini With Snapdragon 8 Gen 5 Chip 8000mAh Battery Launched Sale From April 30 in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X