பிரிச்சி விட்டாப்ல OPPO.. 5.39 மி.மீ பாடியில் 8000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் டேப்லெட் மாடலான ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் (OPPO Pad Mini Matte Display Edition) வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. சீனா மார்கெட்டில் இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் ஏற்கனவே வெளியாகி இருப்பதால், பீச்சர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஓப்போ இந்தியாவின் எக்ஸ் தளத்தில் ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் மற்றும் ஓப்போ எக்னோ எக்ஸ்4 (OPPO Enco X4) இயர்பட்ஸ் மாடலும் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெளியீட்டு தேதி குறிப்பிடவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்த வாரத்துக்குள் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட இருக்கிறது.

2.99 எம்எம் அல்ட்ரா தின் பெசல்களை கொண்ட மாடலாக இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் வெளியாக இருக்கிறது. ஒன்-ஹேண்ட் கன்ட்ரோல் கொடுக்கும்படி 8.8 இன்ச் டிஸ்பிளே மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, காம்பாக்ட் மாடலாகவும் இது இருக்கும். இதை தவிர வேறு பீச்சர்கள் உறுதியாகிவில்லை. இருப்பினும், சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டது.
ஆகவே, அதே பீச்சர்கள் இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் மாடலுடன் ஓப்போ ஏஐ ஸ்டைலஸ் வெளியாகியது. ஆகவே, இதையும் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்டைலஸ் கூடுதல் விலைக்கு கிடைக்குமா அல்லது பேடுடன் சேர்த்து விற்பனைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போது பீச்சர்களை பார்ப்போம்.
ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் அம்சங்கள் (OPPO Pad Mini Matte Display Edition Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.8 இன்ச் (2520 x 1680 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 2.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் ஸ்பீக்கர்களை (Dual Speakers) இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் கொடுத்து இருக்கிறது.
2 மைக்ரோபோன்கள் (Microphones) கொடுக்கப்பட்டு உள்ளன. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 5.39 எம்எம் தடிமன் மற்றும் 279 கிராம் எடை கொண்டுள்ளது. டூயல் பேண்ட் வை-பை 7 (Dual Band Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கிடைக்கிறது.
மேலும், டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. இந்த வேரியண்ட்டின் சீன விலை 3699 யுவானாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.52,916 ஆக இருக்கிறது. இதே விலைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ஓப்போ பேட் மினி மேட் டிஸ்பிளே எடிஷன் மடால் இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications
