Home
Tablets

இந்தியாவுக்கு வரும் மெல்லிய ஒப்போ டேப்லெட்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பேட் மினி (OPPO Pad Mini) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த டேப்லெட் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ஒப்போ பேட் மினி மாடல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ பேட் மினி டேப்லெட் அம்சங்கள் (OPPO Pad Mini Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த ஒப்போ பேட் மினி டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்தியாவுக்கு வரும் மெல்லிய ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ பேட் மினி டேப்லெட் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8.8-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பேட் மினி டேப்லெட் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2520 x 1680 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. சிறிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ பேட் மினி டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் ஒப்போ பேட் மினி டேப்லெட் வெளிவரும். குறிப்பாக இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

அளவீட்டில் இந்த டேப்லெட் 5.39 மிமீ தடிமனும், சுமார் 279 கிராம் எடையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை அனைத்து இடங்களுக்கும் எளிமையாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

இந்தியாவுக்கு வரும் மெல்லிய ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பேட் மினி டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ பேட் மினி டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் இந்த டேப்லெட் ஆனது இந்தியாவில் ரூ.60,000-க்கு கீழ் இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Pad Mini India Launch Tipped: Tablet Spotted on BIS Certification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X