Home
Tablets

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ டேப்லெட்: முழு விவரம்.!

ஒப்போ பேட் என்று அழைக்கப்படும் டேப்லெட் மாடலை ஜூன் இறுதியில் அல்லது ஜூலை மாதம் துவகத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஒப்போ பேட் சாதனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பேட் சா

மேலும் ஒப்போ பேட் சாதனம் இந்தியாவில் ரூ.25000 அல்லது ரூ.30000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போதுஒப்போ பேட் சாதனத்தின் முழு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச்

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் WQXGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,560×1,600 பிக்சல் தீர்மானம், 16:10 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், TÜV Rheinland குறைந்த நீல ஒளி சான்றிதழ்உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல்.

ஒப்போ பேட் மாடலில்

ஒப்போ பேட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.

ஒப்போ பேட் மாடலின் பின்புறம் 13எம்பி

புதிய ஒப்போ பேட் மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதுவிர பல கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.

ஒப்போ பேட் ஆனது

ஒப்போ பேட் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டேப்டெல்

இந்த ஒப்போ டேப்டெல் மாடலில் 8360 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்கது. பின்பு 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல். அதேபோல் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒப்போ பேட்

வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.மேலும் இந்த ஒப்போ பேட் சாதனம் இந்தியாவில்
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Pad May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X