விரைவில் 7100 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ பேட் ஏர்.!

|

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ பேட் ஏர் எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ பேட் ஏர் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேட் ஏர்

விரைவில் 7100 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ பேட் ஏர்.!

வெளிவந்த தகவலின்படி, ஒப்போ பேட் ஏர் சாதனம் ஆனது 10.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000×1200 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ பேட் ஏர் சாதனத்தில் தரமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

விரைவில் 7100 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ பேட் ஏர்.!

ஒப்போ பேட் ஏர் ஆனது டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் இணைந்து குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் வெளிவரும். பின்பு இந்த சாதனத்தில் 7100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ பேட் ஏர் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ57 5ஜி

விரைவில் 7100 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ பேட் ஏர்.!

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,612 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 90 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் Mali G57 MC2 GPU ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.'இந்த ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன். இதுதவிர கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன்.

விரைவில் 7100 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ பேட் ஏர்.!

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Oppo Pad Air May Launching Soon in China: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X