ரூ.20,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த டேப்லெட்: ஒப்போ பேட் ஏர்.!

|

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் டேப்லெட் மாடல்களையும் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. அதாவது ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ரூ.20,000-கீழ் டேப்லெட்-ஐ கொண்டுவந்துள்ளது ஒப்போ. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ பேட் ஏர் மாடலை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 4ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஒப்போ டேப்லெட்-ஐ பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் Mainline Retail Outlet தளங்களில் வாங்க முடியும்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த டேப்லெட்: ஒப்போ பேட் ஏர்.!

குறிப்பாக இந்த ஒப்போ பேட் ஏர் மாடலுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் சில முக்கிய அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் எதிர்பார்த்த சிப்செட் வசதி உள்ளது
புதிய ஒப்போ பேட் ஏர் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் எட்டு கோர்கள் கொண்ட AI சிஸ்டம் பூஸ்டர் 2.1 ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதாவது தனித்துவமான கேமிங் அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் 6என் பிராஸசர் ஆதரவுடன் இந்த டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் இதுபோன்ற டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ததில்லை. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் செயல்திறன் மிகவும் அருமையாக உள்ளது.

மேலும் ஒப்போ பேட் ஏர் மாடல் 4GB of LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

இந்த ஒப்போ பேட் ஏர் மாடல் 7100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 12 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது இந்த ஒப்போ டேப்லெட் மாடல்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த டேப்லெட்: ஒப்போ பேட் ஏர்.!

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

புதிய ஒப்போ பேட் ஏர் டேப்லெட் மாடலின் டிஸ்பிளே வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் 10.36-இன்ச் 2K WUXGA+ IPS டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 8 மிமீ அல்ட்ரா-ஸ்லிம் பெசல்ஸ் இதில் உள்ளது. எனவே இந்த டிவைஸ் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். மேலும் இதன் ஐபிஎஸ் டிஸ்பிளே 2048 ப்ரைட்னஸ் ஆதரிக்கும் அடாப்டிவ் eye-comfort தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. எனவே இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மேலும் TÜV Rheinland Low Blue Light சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் டேப்லெட். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் எந்த நிறுவனமும் இதுபோன்ற ஒரு அருமையான டிஸ்பிளேவை வழங்கியதில்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது தனித்துவான டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் டேப்லெட்.

தரமான ஆடியோ வசதி
ஒப்போ பேட் ஏர் டேப்லெட் மாடல் தரமான ஆடியோ வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த மாடல் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு இந்த குவாட் ஸ்பீக்கர்கள் 3டி சவுண்ட் effects-ஐ வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதாவது இதுபோன்ற ஆடியோ தரத்தை வேறு எந்த நிறுவனமும் வழங்கியது இல்லை என்றே கூறலாம்.

டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஆடியோ டிகோடிங் ஆகியவை சிறந்த அதிர்வை கொடுக்கும். அதாவது நீங்கள் இந்த டேப்லெட் உதவியுடன் ஓடிடி-இல் படம் பார்க்கும் போது இந்த டால்பி அட்மாஸ் வசதியை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இதன் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த டேப்லெட்: ஒப்போ பேட் ஏர்.!

முதல் சன்செட் Dune 3D டிசைன்
புதிய ஒப்போ டேப்லெட்-இன் வடிவமைப்பு அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக முதல் சன்செட் Dune 3D டிசைன் உடன் வெளிவந்துள்ளது ஒப்போ டேப்லெட் . எனவே மற்ற நிறுவனங்களின் டேப்டெல் மாடல்களை விட இது தனித்துவமாக தெரியும். பின்பு இதன் பின்புறத்தில் பளபளப்பான மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் 5 லேயர் கோட்டிங் மற்றும் 3டி finishing தொழில்நுட்பம் போன்றவை இருப்பதால் ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் அதிக எடை இல்லாமல் மென்மையான உணர்வை வழங்குகிறது.

அதேபோல் இந்த டேப்லெட் பின்புறம் sandblasted finish உள்ளது. குறிப்பாக இது மணல் துகள்களைப் பிரதிபலிக்கும் பளபளப்பான வடிவமைப்பை தருகிறது. இதுபோன்ற சிறந்த வடிவமைப்பைக் கொண்ட டேப்லெட் மாடல்களுக்கு தான் தற்போது சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதுதவிர புதிய டேப்லெட் மெட்டல் பாடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 6.94 மிமீ தடிமன் மற்றும் 440 கிராம் மெலிதான எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ பேட் ஏர் டேப்லெட்.

மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி
ColorOS 12.1 அடிப்படையாக கொண்டு இயங்குகிறது ஒப்போ பேட் ஏர் டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஃபைல் டிராக் அண்ட் டிராப், கிளிப்போர்டு ஷேரிங், மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி போன்ற அற்புதமான வசதிகளையும் கொண்டுள்ளது இந்த ஒப்போ டேப்லெட் மாடல்.

இந்த ஒப்போ பேட் ஏர் டிவைஸ்-இல் two- finger ஸ்பிலிட் ஸ்கிரீன், டூயல் விண்டோக்கள், ஸ்மார்ட் சைட்பார், four-finger floating window போன்ற சிறப்பான அம்சங்களும் உள்ளன.

மேலும் இதில் உள்ள ColorOS 12.1 ஆனது பல புதிய அம்சங்களை கொண்டுள்ளதாக ஒப்போ நிறுவனம் கூறுகிறது. அலுவலக வேலை, படிப்பு, வீடியோ அழைப்பு மற்றும் சிறந்த பொழுதுபோக்கிற்கு இந்த டேப்லெட் மாடல் அருமையாக பயன்படும் என்றே கூறலாம்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த டேப்லெட்: ஒப்போ பேட் ஏர்.!

காத்திருப்பு முடிந்தது
இதுபோன்ற ஒரு டேப்லெட் மாடலக்கு தான் நீண்ட நாட்கள் மக்கள் காத்திருந்தனர். எனவே நீண்ட நாள் காத்திருப்பு முடிந்தது என்றுதான் கூறவேண்டும். பின்பு இந்த டேப்லெட் ரூ.20,000-க்கு கீழ் கிடைப்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் டிஸ்பிளே, சன்செட் Dune 3D டிசைன்
போன்றவை இந்த டேப்லெட் மாடலின் முக்கிய அம்சங்கள் என்றே கூறலாம். பின்பு இந்த டேப்லெட் மாடலில் உள்ள மென்பொருள் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் தரமான ஆடியோவை வழங்குகிறது புதிய ஒப்போ பேட் ஏர் டேப்லெட் மாடல். எனவே இந்த புதிய ஒப்போ டேப்டெல் மாடலை நம்பி வாங்கலாம்.

OPPO பேட் ஏர் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்போ பேட் ஏர் டிவைஸின் அடிப்படை வேரியண்ட் மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் இப்போது வெறும் ரூ. 16,999 விலையில் வருகிறது. அதேபோல், இதன் உயர்நிலை மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் இப்போது வெறும் ரூ. 19,999 விலையில் வருகிறது. நீங்கள் Flipkart, OPPO ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்டுகள் வழியாக இந்த டேப்பை வாங்கி பயன்பெறலாம். OPPOverse திட்டத்தின் கீழ் OPPO Reno8 Series உடன் OPPO Pad Air டிவைஸை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். My OPPO App பயன்பாட்டில் இருந்து இதற்காக நீங்கள் பதிவு செய்யலாம். அப்படிச் செய்யும் போது பிரத்தியேக OPPOverse சலுகை கிடைக்கும். இத்துடன் ரூ.5,999 மதிப்புள்ள OPPO Watch சாதனத்தை வெறும் 1 ரூபாய் செலுத்தி நீங்கள் வாங்கிடக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO Pad Air Disrupts Tablet Market With Feature Rich tab Under Rs. 20,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X