Home
Tablets

டேப்லெட் மார்க்கெட் இனி OPPO கையில்.. பட்ஜெட் விலையில் 10050mAh பேட்டரி, 12.1 இன்ச் டிஸ்பிளே!

ஓப்போ (OPPO) நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆக ஒப்போ பேட் ஏர் 5 (Oppo Pad Air 5) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாஃப்ட் லைட் வெர்ஷன்களுடன் 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லெட் 12.1-இன்ச் டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா சிப்செட், 10050mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

ஒப்போ பேட் ஏர் 5 டேப்லெட் முக்கிய அம்சங்கள்: ஒப்போ பேட் ஏர் 5 ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 16 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இந்த டேப்லெட் 12.1 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

OPPO புது டேப்லெட்.. பட்ஜெட் விலையில் 10050mAh பேட்டரி!

மேலும் இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 2800 × 1980 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 900 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், 284 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 540 ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 98 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் ஆகிய அம்சங்களையும் வழங்குகிறது.

ஒப்போவின் இந்த புதிய பேட் ஏர் 5 ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது 2.5GHz பீக் கிளாக்டு ஸ்பீடை வழங்குகிறது. இந்த சிப்செட் ஒரு ஆர்ம் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு, 12 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பேட் ஏர் 5 மாடல் ஆனது பேக் பேனலில் சிங்கிள் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா செட்டப்பானது 30fps இல் 1080p ரெசல்யூஷன் வீடியோக்களை பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளது.

கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒப்போ பேட் ஏர் 5 டேப்லெட் ஆனது வைஃபை 6 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இதே டேப்லெட்டின் செல்லுலார் வெர்ஷனில் 5ஜி, பீடோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ மற்றும் க்யூஇசட்எஸ்எஸ் ஆகிய கூடுதல் விருப்பங்கள் கிடைக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ பேட் ஏர் 5 மாடல் ஆனது 10050mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 33W சூப்பர்வூக் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. கடைசியாக அளவீடுகளை பொறுத்தவரை இது 266.01x192.77x6.83 மிமீ என்கிற பரிமாணங்களை கொண்டுள்ளது மற்றும் எடையை பொறுத்தவரை சுமார் 599 கிராம் உள்ளது.

ஒப்போ பேட் ஏர் 5 டேப்லெட் விலை: சீனாவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ பேட் ஏர் 5 டேப்லெட்டின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.24,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்போ பேட் ஏர் 5 டேப்லெட்டின் ஹை-எண்ட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் முறையே தோராயமாக ரூ.28,000 மற்றும் சுமார் ரூ.32,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

மறுபுறம் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் கொண்ட சாஃப்ட் லைட் வெர்ஷன்கள் ஆனது முறையே சுமார் ரூ.31,000 மற்றும் சுமார் ரூ.35,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

ஒப்போவின் இந்த புதிய பேட் ஏர் 5 டேப்லெட் மாடலானது 2025 டிசம்பர் 31 அன்று ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் வழியாக சீனாவில் விற்பனைக்கு வரும். இது ஸ்டார்லைட் பவுடர் மற்றும் ஸ்பேஸ் கிரே (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். மற்ற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad Air 5 New Tablet With 10050mAh battery 12 1 inch Display launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X