Home
Tablets

ஆளுக்கு 1 வாங்குவீங்க.. 8000mAh பேட்டரி.. 256GB மெமரி.. நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OPPO டேப்லெட்..

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் ரூ.20,000 விலையில் ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் போன்று இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 (OPPO Pad Air 2) எனும் டேப்லெட் மாடலை ஒப்போ நிறுவனம் நாளை (நவம்பர் 23) அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக நாளை சீனாவில் மட்டுமே இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இந்த புதிய ஒப்போ பேட் ஏர் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் ஒப்போ பேட் ஏர் 2 மாடலின் டிசைன், விவரக்குறிப்புகள், விலை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

256GB மெமரி.. நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OPPO டேப்லெட்..

அதன்படி ஒன்பிளஸ் பேட் கோ போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் ஏர் 2 மாடல். அதாவது இந்த ஒப்போ டேப்லெட் பின்புறம் ஒற்றை கேமரா வசதி உள்ளது. பின்பு பெரிய டிஸ்பிளே மற்றும் 538 கிராம் எடையில் ஒப்போ டேப்லெட் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய ஒப்போ பேட் ஏர் 2 மாடலின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

11-4-இன்ச் 2கே டிஸ்பிளே உடன் ஒப்போ பேட் ஏர் 2 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1,720 x 2,408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒப்போ பேட் ஏர் 2 விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக 8எம்பி சிங்கிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஒப்போ பேட் ஏர் 2 அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலில் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒப்போ டேப்லெட் அறிமுகமாகும்.

256GB மெமரி.. நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OPPO டேப்லெட்..

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ பேட் ஏர் 2 மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் புதிய ஒப்போ டேப்லெட் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடலுக்கு வழங்கப்படும்.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ பேட் ஏர் 2 மாடல் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல் ஆனது ரூ.15,300 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad Air 2 will be launched tomorrow: check price, specifications, design :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X