Home
Tablets

மார்க்கெட் மிரளும்.. 8000 எம்ஏஎச் பேட்டரி.. 11.35-இன்ச் டிஸ்பிளே.. அசத்தலான Oppo டேப்லெட்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ பேட் ஏர் 2 மாடலை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் உடன் இந்த ஒப்போ பேட் ஏர் 2 எனும் டேப்லெட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த தகவலின்படி ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ போன்கள் வரும் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேட் ஏர் 2 மாடலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

11.35-இன்ச் டிஸ்பிளே.. அசத்தலான Oppo டேப்லெட்.. எந்த மாடல்?

அதாவது ஒப்போ பேட் ஏர் 2 (Oppo Pad Air 2) மாடல் ஆனது 11.35-இன்ச் 2.8கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த ஒப்போ டேப்லெட் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேசமயம் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஒப்போ பேட் ஏர் 2 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான டேப்லெட் அறிமுகமாகும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 ( Helio G99) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் கலர்ஒஎஸ் 13.2 (ColorOS 13.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ டேப்லெட். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ பேட் ஏர் 2 மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். குறிப்பாக இந்த சாதனைத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

11.35-இன்ச் டிஸ்பிளே.. அசத்தலான Oppo டேப்லெட்.. எந்த மாடல்?

அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல். மேலும் இந்த புதிய ஒப்போ டேப்லெட் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல அசத்தலான சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனத்திற்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Pad Air 2 will be launched alongside the Reno 11 smartphone: check release date, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X