Home
Tablets

பட்ஜெட் விலை.. 8000mAh பேட்டரி.. 256GB மெமரி.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது OPPO டேப்லெட்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ பேட் ஏர் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒப்போ டேப்லெட் ஆனது ஒன்பிளஸ் பேட் கோ போன்று உள்ளது. மேலும் இப்போது ஒப்போ பேட் ஏர் 2 மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஒப்போ பேட் ஏர் 2 மாடல் ஆனது 11-4-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது பின்பு 1,720x2,408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

256GB மெமரி.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது OPPO டேப்லெட்.. எந்த மாடல்?

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஒப்போ பேட் ஏர் 2 விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக EIS ஆதரவு கொண்ட 8எம்பி சிங்கிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஒப்போ பேட் ஏர் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இந்த டேப்லெட் மாடலில் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ பேட் ஏர் 2 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதேபோல் கலர் ஒஎஸ் 13.2 ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் புதிய ஒப்போ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஒப்போ பேட் ஏர் 2 மாடலுக்கு வழங்கப்படும்.

குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 5ஜி ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பாக அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ பேட் ஏர் 2 மாடல். ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்ட்ரீமர் சில்வர் நிறங்களில் இந்த ஒப்போ பேட் ஏர் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

256GB மெமரி.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது OPPO டேப்லெட்.. எந்த மாடல்?

குறிப்பாக ஒப்போ பேட் ஏர் 2 மாடலின் ஆரம்ப விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.15000) ஆகும். தற்போது சீனாவில் மட்டுமே இந்த ஒப்போ டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது. கூடிய விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad Air 2 Launched with 8000mAh Battery: check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X