நவ.23 இல் அறிமுகமாகும் OPPO-வின் 3வது தயாரிப்பு.. OnePlus-ன் 2 டேப்லெட்களுக்கும் ஆப்பு வைக்கும் விலை!
வருகிற நவம்பர் 23 ஆம் தேதியன்று, ஒப்போ நிறுவனம் வெளியீட்டு நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில் ஒப்போவின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதே நாளில் மூன்றாவதாக ஒரு தயாரிப்பும் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதென்ன தயாரிப்பு? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? குறிப்பிட்ட நாளில் அறிமுகமாகும் 2 புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? அது என்ன மாதிரியான விலை நிர்ணயங்களை பெறும்? அந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

நவம்பர் 23 ஆம் தேதியன்று அறிமுகமாகும் மூன்றாவது தயாரிப்பு - ஒப்போ பேட் ஏர் 2 (Oppo Pad Air 2) ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆகும். இது ஒப்போ ரெனோ 11 சீரீஸ் உடன் சேர்ந்து அறிமுகமாகும். ஒப்போ ரெனோ 11 சீரீஸின்கீழ் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.
ஒப்போ பேட் ஏர் 2-வில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்.. இது என்ன விலைக்கு வரும்? இது கடந்த ஆண்டு வெளியான ஒப்போ பேட் ஏர் 1 டேப்லெட்டின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒப்போ பகிர்ந்த சில டீசர்களின் வழியாக பேட் ஏர் 2 மாடலானது தடிமனான டிஸ்பிளே பெஸல்கள் மற்றும் வட்டமான மூலைகளுடன் இரண்டு வெவ்வேறு கலர்களில் அறிமுகமாகும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அதாவது ஒப்போ பேட் ஏர் 2 மாடலானது, கடந்த 2023 அக்டோபரில் அறிமுகமான ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை போலவே இருக்கிறது. ஒப்போ பேட் ஏர் 2 ஆனது ஒன்பிளஸ் பேட் கோவின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது (அறியதோர்களுக்கு ஒன்பிளஸ், ஒப்போவின் துணை நிறுவனமாகும்).
இது உண்மையாகும் பட்சத்தில், ஒப்போ பேட் ஏர் 2-வின் விலை நிர்ணயம் ஒன்பிளஸ் பேட் கோவின் விலையுடன் ஒற்றுப்போகலாம். ஒருவேளை இது ஒன்பிளஸ் பேட் கோவை விட சற்றே மலிவான விலைக்கு கூட அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் கோவின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. முதல் ஒன்பிளஸ் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் ரூ.35,499 முதல் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் கோவும் ஒப்போ பேட் ஏர் 2-வும் அம்சங்களை பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11.35-இன்ச் 2.4கே டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், இஐஎஸ் (EIS) உடனான 8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 8000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த இடத்தில் கடந்த ஆண்டு அறிமுகமான ஒப்போ பேட் ஏர் டேப்லெட்டின் பேஸிக் வேரியண்ட் (4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்) ரூ.16,999 க்கு வெளியானது. தற்போது இது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நவ.23 அன்று நடக்கும் ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட்டின் சீன அறிமுகத்தை தொடர்ந்து, கூடிய விரைவில் இந்திய அறிமுகமும் நடக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒன்பிளஸ் பேட் ஏர் 1 மாடலானது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கிறது.
அதே நாளில் சீனாவில் அறிமுகமாகும் ஒப்போ ரெனோ 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட இந்திய சந்தைக்கு வரும். இதில் ரெனோ 11 மாடலானது ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் உடனும், ரெனோ 11 ப்ரோ மாடலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடனும் வரலாம்.
இவ்விரு ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மெயின் கேமராவிலும், அதன் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவிலும் இருக்கும். எதிர்பார்க்கப்படும் விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 11 மாடலானது ரூ.34,990 க்கும், ஒப்போ ரெனோ 11 ப்ரோ மாடலானது ரூ.47,990 க்கும் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications