போட்றா வெடிய.. பட்ஜெட் விலையில் 10050mAh பேட்டரி, 8GB ரேம், 5ஜி ஆதரவு.. புதிய OPPO டேப்லெட் அறிமுகம்!
இந்திய சந்தையில் ஒப்போ (OPPO) நிறுவனம் ஆனது அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்போன்கள் ஆக ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (Oppo Reno 15 Series) உடன் சேர்த்து 10050mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய டேப்லெட் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
அது ஒப்போ பேட் 5 (Oppo Pad 5) டேப்லெட் ஆகும். இது 33W சூப்பர்வூக் (SuperVOOC) வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. மேலும் ஒப்போவின் இந்த புதிய டேப்லெட் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ பேட் 5 டேப்லெட் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஒப்போ பேட் 5 மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ஆனது ரூ.26,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டேப்லெட்டின் வைஃபை + 5ஜி வேரியண்ட் ஆனது ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இது ஒப்போ பேட் 5 டேப்லெட் மாடலின் சிங்கிள் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜின் ஆப்ஷனின் விலை நிர்ணயங்கள் ஆகும். ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கும் இந்த டேப்லெட் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் வழியாக.. Aurora Pink மற்றும் Starlight Black ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.
ஒப்போ பேட் 5 டேப்லெட்டின் அம்சங்கள்: ஒப்போ பேட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 கொன்டு இயங்குகிறது. இந்த டேப்லெட் 12.1-இன்ச் 2.8கே (2800 × 1980 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
இந்த டிஸ்பிளே - 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 540ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 900 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 284 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 98 சதவீதம் DCI-P3 கலர் கேமட் ஆகிய அம்சங்களையும் கொண்டு உள்ளது
இந்த ஒப்போ டேப்லெட் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது ஆர்ம் மாலி-ஜி615 எம்சி2, 8 ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ பேட் 5 டேப்லெட் ஆனது சிங்கிள் 8 மெகாபிக்சல் ரியர் கேமராவை (எப்/2.0 அபெர்க்ஷர், 77 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆட்டோஃபோகஸ்) கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 1080பி ரெசல்யூஷனில் 30fps வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது.
பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ பேட் 5 டேப்லெட் ஆனது 33W சூப்பர்வூக் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 10050mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆன்போர்டு சென்சார்களின் பட்டியலில் - ஒரு ஆம்பியண்ட் லைட் சென்சார், ஒரு கலர் டெம்ப்ரேச்சர் சென்சார், ஒரு இ-காம்பஸ், ஒரு ஆக்சலேரோமீட்டர், ஒரு ஹால் சென்சார் மற்றும் ஒரு ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை ஒப்போ பேட் 5 டேப்லெட் ஆனது வைஃபை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் இந்த டேப்லெட் 266x192.8x68 மிமீ மற்றும் எடையில் சுமார் 599 கிராம் எடையை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








