வேற லெவல்.. 10300mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. வருகிறது புதிய ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ பேட் 5 (Oppo Pad 5)எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. அதாவது இந்த டேப்லெட் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் முதலில் இந்த டேப்லெட் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ பேட் 5 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ பேட் 5 அம்சங்கள் (Oppo Pad 5 Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ டேப் 5 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3கே ரெசல்யூஷன் (3K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் (Dimensity 9400 Plus chipset) உடன் ஒப்போ பேட் 5 மாடல் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ பேட் 5 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ஒப்போ பேட் 5 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் எடை 579 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10300எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பேட் 5 அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒப்போ பேட் 5 மாடல் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த டேப்லெட் மாடல் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
பர்பிள், சில்வர், கிரே நிறங்களில் ஒப்போ பேட் 5 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை, ப்ளூடூத், கலிலியோ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உளளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ பேட் 5 மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
source: 1


Click it and Unblock the Notifications