வேற லெவல்.. 12140mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. அறிமுகமானது புது OPPO டேப்லெட்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ பேட் 4 ப்ரோ (OPPO Pad 4 Pro) எனும் டேப்லெட் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 12140எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 8 ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒப்போ பேட் 4 ப்ரோ விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ பேட் 4 ப்ரோ அம்சங்கள் (OPPO Pad 4 Pro Specifications): 13.2-இன்ச் 3.4கே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே(3.4K 144Hz display) உடன் ஒப்போ பேட் 4 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், 540Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் (900 nits HBM brightness)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஒப்போ பேட் 4 ப்ரோ வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி + 16ஜிபி மெமரி + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ஒப்போ பேட் 4 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது.
13எம்பி ரியர் கேமரா உடன் ஒப்போ பேட் 4 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), 8 ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் (Hi-Res Audio certification) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் ஒப்போ பேட் 4 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்னிங் க்ளோவ் (Morning Glow), கேலக்ஸி சில்வர் (Galaxy Silver), ஸ்பேஸ் கிரே (Space Grey)நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.
12140mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ பேட் 4 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ப்ளூடூத் 5.4, வைஃபை 7 802.11 பிஇ, என்எப்சி, 5ஜி ஷேரிங், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
அதேபோல் ஒப்போ பேட் 4 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,812) ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 16-ம் தேதி சீனாவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வருகிறது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த டேப்லெட் மாடல் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications