Home
Tablets

மிரளவிட்டாப்ல.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. 12GB ஜிபி ரேம்.. 67W சார்ஜிங்.. 9510mAh பேட்டரி.. எந்த மாடல்?

இப்படி இருக்கனும்னு டேப்லெட் பிரியர்கள் விரும்பும் படியான பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. 3K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9510mAh பேட்டரி, 12GB ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 லீடிங் சிப்செட் உடன் மார்கெட்டை மிரள விட்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் விவரங்கள் இதோ.

போகும் இடத்துக்கு லேப்டாப் எடுத்து கொண்டு போவது சிரமம். ஆகவே, லேப்டாப்புக்கு நிகரான பீச்சர்களுடன் டேப்லெட் இருந்தா வாங்கனும்பா என்று முடிவெடுத்த கஸ்டமர்களை மரண வெயிட்டிங் மோடில் ஓப்போ பேட் 3 ப்ரோ போட்டு வைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் டேப்லெட் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது.

மிரளவிட்டாப்ல.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. 12GB ஜிபி ரேம்.. 67W சார்ஜிங்!

ஓப்போ பேட் 3 ப்ரோ அம்சங்கள் (OPPO Pad 3 Pro Specifications): இந்த ஓப்போ டேப்லெட் டிஸ்பிளே, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களில் தட்டித்தூக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட லேப்டாப்புக்கு நிகரான டிஸ்பிளே பீச்சர்களை பேக் செய்துள்ளது. அதாவது, 3K ரெசொலூஷனுடன் 12.1 இன்ச் (3200 x 2120 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. அதேபோல அவுட்டோர் அனுபவத்துக்கு 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஓடிடி பிரியர்களுக்காக டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 303 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

ஆகவே, டிஸ்பிளேவில் எந்த குறையும் கூறிவிட முடியாது. இந்த டிஸ்பிளவுக்கு ஏற்ப லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ரேம் மற்றும் சிப்செட் கிடைக்கிறது. இந்த ஓப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் போன்களை போல கலர்ஓஎஸ் 14.1 (ColorOS 14.1) வருகிறது.

இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் லீடிங் வெர்ஷனாகும். இந்த சிப்செட்டுக்கு ஏற்றபடி அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த ஓப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட்டில் 6 ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் ஓப்போ போன்களை போலவே டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் உள்ளது. பேட்டரி பேக்கப் பற்றிய கவலை வேண்டியது கிடையாது. 67W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9510mAh பேட்டரி பேக் செய்துள்ளது.

கேமரா சிஸ்டம் வழக்கம் போலவே 13 எம்பி சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கிட்டத்தட்ட 10000mAh பேட்டரி இருந்தாலும், அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் வெறும் 6.49 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. இருப்பினும், 586 கிராம் எடையில் கிடைக்கிறது. 5ஜி ஷேரிங் மட்டும் வருகிறது. சிம் சிலாட் கிடையாது.

ஆகவே, வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ஓப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் ஸ்டார்லிட் ப்ளூ (Starlit Blue) கலரில் வந்துள்ளது. ரூ.53,445 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம். பென்சில் 2 ப்ரோ மற்றும் ஸ்மார்ட் கீபோர்ட் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO Pad 3 Pro With 9510mAh Battery 12GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X