வேற லெவல்.. 9510mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. அறிமுகமானது ஒப்போ டேப்லெட்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பேட் 3 ப்ரோ (OPPO Pad 3 Pro) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் சிப்செட், 9510mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ பேட் 3 ப்ரோ மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.
ஒப்போ பேட் 3 ப்ரோ அம்சங்கள் (OPPO Pad 3 Pro Specifications): 12.1-இன்ச் 3கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200 x 2120 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் பிரைட்னஸ், 540 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 7: 5 ஆஸ்பெக்ட் ரேஷியோ, டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

அதேபோல் 3.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் ஒப்போ பேட் 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி + 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ஒப்போ பேட் 3 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் கலர்ஒஎஸ் 14.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்போ டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்இடி பிளாஷ் ஆதரவுடன் 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஆறு ஸபீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ்(Hi-Res Audio certification) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ பேட் 3 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 586 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9510mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ பேட் 3 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging) வசதியும் உள்ளது.
வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி, 5ஜி ஷேரிங், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் ஒப்போ பேட் 3 ப்ரோ டேப்லெட் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,365)-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 30-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த டேப்லெட்.
photo credit: oppo, fonearena


Click it and Unblock the Notifications








