Home
Tablets

இப்படி ஒரு டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய போகுதா OPPO! இனி ஒரு மாசம் தூக்கம் வராதே!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பேட் 2 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஒப்போ டேப்லெட் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ பேட் 2

ஒப்போ பேட் 2

அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஒப்போ பேட் 2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இணையத்தில் கசிந்த ஒப்போ பேட் 2 மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

 Dimensity சிப்செட்

Dimensity சிப்செட்

ஒப்போ பேட் 2 ஆனது மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் ஆப்ஸ்களை கூட இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

மேலும் 2கே ஆதரவு கொண்ட AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் ஒப்போ பேட் 2 மாடல். எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

பேட்டரி

இதுதவிர 5ஜி ஆதரவு, அசத்தலான கேமரா மற்றும் நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஒரு நல்ல டேப்லெட் வாங்க நினைக்கும் பயனர்கள் ஒரு மாதம் காத்திருக்கவும்.

மேலும் ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 1,080x2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColorOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

4800 எம்ஏஎச் பேட்டரி

4800 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 4800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799 (இந்திய மதிப்பில் ரூ.20,600) ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Pad 2 will launch next year with Dimensity 9000 chipset: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X