Home
Tablets

அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!

ஒப்போ நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து புதிய புதிய போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதேபோல் தற்போது டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ பேட் 2
அதன்படி ஒப்போ பேட் 2 எனும் டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ டேப்லெட் மாடலுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தற்போது ஒப்போ பேட் 2 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது ஒப்போ பேட் 2.!

பெரிய டிஸ்பிளே வசதி
மேலும் ஆன்லைனில் தற்போது ஒப்போ பேட் 2 மாடலின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ஒப்போ பேட் 2 மாடல் ஆனது 11-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2800 x 2000 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட் 2 மாடல்.

அசத்தலான சிப்செட்
ஒப்போ பேட் 2 மாடலில் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எனவே கேமிங் பயன்களுக்கு இந்த டேப்லெட் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது ஒப்போ பேட் 2.!

ஸ்டோரேஜ் வசதி
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி ஒப்போ பேட் 2 மாடலில் 12ஜிபி ரேம் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் பேட்டரி வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

சூப்பரான பேட்டரி
அதாவது ஒப்போ பேட் 2 மாடல் ஆனது 9500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த ஒப்போ டேப்லெட். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒப்போ பேட் 2 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ பேட் ஏர் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ பேட் ஏர்
ஒப்போ பேட் ஏர் ஆனது 2000 x 1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 10.36-இன்ச் அளவிலான 2கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பின்பு இந்த டேப்லெட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பேட் ஏர் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயர் கலர்ஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, Oppo Pad Air ஆனது எஃப்/2.0 லென்ஸ் உடனான சிங்கிள் 8MP ரியர் கேமராவை பேக் செய்கிறது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது 5MPசெல்பீ கேமராவை கொண்டுள்ளது.

அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது ஒப்போ பேட் 2.!

அதேபோல் டால்பி அட்மோஸ் ஆதரவுடனான குவாட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த ஒப்போ பேட் ஏர் டேப்லெட் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 7100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஒப்போ பேட் ஏர் டேப்லெட் ஆனது ஸ்டைலஸ் சப்போர்ட் உடன் சேர்த்து மேக்னட் கீபோர்ட்டிற்கான ஆதரவையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad 2 will be launched soon with MediaTek Dimensity 9000 chipset: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X