Home
Tablets

பெரிய டிஸ்பிளே.. டக்குனு சார்ஜ் ஆக 67W சப்போர்ட்.. வாவ் சொல்ல வைக்கும் விலை.. Oppo Pad 2 அறிமுகம்!

தனது முதல் டேப்லெட்டை அறிமுகம் செய்த ஓராண்டுக்கு பிறகு, ஒப்போ அதன் இரண்டாவது டேப்லெட்டை களமிறக்கியுள்ளது. ஒப்போ பேட் 2 (Oppo Pad 2) என்று அழைக்கப்படும் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் விலை நிர்ணயம் என்ன? இது அம்சங்கள் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஒப்போ பேட் 2 முக்கிய அம்சங்கள்: ஒப்போவின் புதிய டேப்லெட் 11.61-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே, 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர்ஓஎஸ் ஃபார் பேட் 13ஓஎஸ், 67W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

வாவ் சொல்ல வைக்கும் விலையில் Oppo பேட் 2 அறிமுகம்!

ஒப்போ பேட் 2 விரிவான அம்சங்கள்: ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் டேப்லெட் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 296பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1800 x 2880 பிக்சல்ஸ் மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 11.61-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது 12ஜிபி வரையிலான ரேம் உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 9000 மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ பேட் 2-வில் 13-மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. சுவாரசியமாக இது 80-டிகிரி பீல்ட் ஆஃப் வியூ உடனான எஃப்/2.2 லென்ஸ் உடன் வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஒப்போ பேட் 2-வின் இன்டர்னல் மெமரியை விரிவாக்க செய்ய முடியாது. ஏனெனில் இதில் எஸ்டிகார்டு ஸ்லாட் கிடையாது. அதனால் தான் இந்த டேப்லெட் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போல! கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை வைஃபை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.

பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஒப்போ பேட் 2-வில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சம் உள்ளது; இது செல்பீ கேமரா வழியாக டேப்லெட்டை அன்லாக் செய்ய உதவும். கடைசியாக 552 கிராம் எடையுள்ள இந்த ஒப்போ டேப்லெட் 67W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒப்போ பேட் 2 விலை: ஒப்போ பேட் 2 மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8ஜிபி+256ஜிபி ஆப்ஷன் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.36100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12ஜிபி+512ஜிபி மற்றும் 12ஜிபி+512ஜிபி வேரியண்ட்கள் முறையே (தோராயமாக) ரூ.40900 க்கும் ரூ.48200 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(சீன மொழியில் இருந்து அப்படியே மொழிபெயர்த்தால்) இந்த டேப்லெட் ஹிகாரி ஃபெதர் கோல்ட் (Hikari Feather Gold) மற்றும் நெபுலா கிரே (Nebula Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது வருகிற மார்ச் 24 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது. ஒப்போ பேட் 2-வின் இந்திய அறிமுகம், விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Launched Its Second Tablet In China Check New Oppo Pad 2 Price And Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X