Home
Tablets

அடுத்த ஒன்பிளஸ் டேப்லெட் ரெடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 13380mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய டேப்டெல் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக டீசரை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் பேட் 4 மாடல் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த டேப்லெட் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த டேப்டெல் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 specifications): 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 × 1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த ஒன்பிளஸ் டேப்லெட் ரெடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம்
செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

13எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

13380எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் பேட் 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மோச்சா பிரவுன் (Mocha Brown), டான் கோல்டு (Dawn Gold), மோனெட் பர்பிள் (Monet Purple) நிறங்களில் இந்த புதிய டேப்லெட் வெளிவரும். தற்போது ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் சில விவரக்குறிப்புகள் தான் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த டேப்லெட் மாடலின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications):
- 13.2-இன்ச் 3.4கே (2400 × 3392 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 540ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- TÜV ரெயிண்லேண்ட் ஐ கேர் 4.0 சான்றிதழ்
- அட்ரெனோ 830 ஜிபியு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5T ரேம்
- 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15)
- கூகுள் ஜெமினை (Google Gemini), சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) மற்றும் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) அம்சங்கள்
- பின்புறத்தில் 13-மெகாபிக்சல் சென்சார்
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் சென்சார்
- எட்டு ஸ்பீக்கர்ஸ்
- LHDC ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது
- ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழுடன் வருகிறது
- வெப்ப மேலாண்மைக்கான கிராஃபீன் கம்போசைட் வேப்பர் சேம்பர்களை கொண்டுள்ளது.
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 12140mAh பேட்டரி
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7
- யூஸ்எஸ்பி டைப்-சி ஆதரவு
- ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்டுடன் இணக்கமானது
- அளவீட்டில் 289.61×209.66×5.97மிமீ
- எடையில் 675 கிராம்.

அடுத்த ஒன்பிளஸ் டேப்லெட் ரெடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் 3 மாடல் தற்போது அமேசான் தளத்தில் ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலும் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus teases new tablet launch in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X